நடிகையுடனான காதலை வெளிபடுத்த துடிக்கும் இளம் நடிகர்..! லாக்டவுன் முடியற வர பொருத்துகமாட்டியா என நடிகை விளாசல்..

Its love in the air for Harish Kalyan and Priya Bhavani Shankar

by Chandru, Sep 30, 2020, 13:10 PM IST

தாராள பிரபு, பியார் பிரேம் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளவர் ஹரிஷ் கல்யாண். தனது சமூக ஊடக பக்கத்தில் பிரியா பவானி சங்கருடன் நெருக்கமாகக் கட்டிப்பிடித்திருக்கும் படத்தை வெளியிட்டு, கடைசியாக எங்கள் காதல் விரைவில் அம்பலத்திற்கு வரவிருப்பதாகக் கூறியதையடுத்து இணையத்திற்கு தீ வைத்தார். அவர் கூறும்போது, இறுதியாக, ஹரிஷ் இதயத்தில் பிரியா... காதல் காற்றில் மிதக்கவுள்ளது.. என்று சொல்லி #HarishHeartsPriya #LoveIsInTheAir." என ஹேஷ் டேக் பகிர்ந்தார்.

அதற்கு பிரியா பவானி சங்கர் பதிலளித்தார், "ஊரடங்கு முடியர வரைக்கும் உன்னால காத்திருக்க முடியலயா, நான் முதலில் வெளியிடுவேன். இதை நான் தான் முதலில் பகிரங்கப்படுத்த விரும்பினேன். ஏனென்றால் நான்தான் அதைப் பெற்றிருக்கிறேன்." என்றார்.

உடனே ஹரிஷ், காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நான் அதை அதிகாரப்பூர்வமாக்குகிறேன்! நாளை மாலை 5 மணிக்கு; என்றார்.ஹரிஷ் கல்யான், பிரியா தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் ரிது வர்மா நடித்த தெலுங்கு ஹிட் படமான பெல்லி சூப்புலுவின் தமிழ் ரீமேக்கில் நடிக்கின்றனர். ஏ.எல் விஜய்யிடம் பணியாற்றிய கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கிருஷ்ணன் வசந்த். ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹரிஷும் பிரியாவும் ஒருவரையொருவர் முந்திரிக்கொட்டைபோல் முந்திக்கொண்டு நான்தான் அம்பலப் படுத்துவேன் என்றதும் அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களின் இந்த போட்டி புதிய படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை