மும்பை அரசியல் தாக்குதலுக்கு பயந்து தலைவி பட நடிகை தமிழகம் வருகிறார்.. ரகசியமாக நடன பயிற்சி எடுக்கிறார்..

kangana Plan to come TamilNadu for Thalaivi Shooting

by Chandru, Sep 30, 2020, 13:18 PM IST

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக் கில் வாரிசு நடிகைகளை குற்றம் சாட்டி பின்னர் பாலிவுட் நடிகர்களில் பலர் போதைக்கு அடிமை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பிறகு மகாராஷ்ட்ரா ஆளும் கட்சியானசிவசேனா மீது தாக்குதல் நடத்திய கங்கனா ரனாவத், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்போல் மும்பை இருக்கிறது எனச் சொல்லி ஆளும் கட்சியின் கோபத்துக்குள்ளானார் கங்கனா ரனாவத். அவருக்கு எதிர்ப்பும் போராட்டமும் தொடங்கியதையடுத்து தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மத்திய அரசிடமிருந்து கமாண் டோ பாதுகாப்பு பெற்றார் கங்கனா. அதேவேகத்தில் மானலியிலிருந்து மும்பை திரும்பி வந்தார். ஆனால் அங்கு நிலைமை வேறுவிதமாக மாறியது.


கங்கனா வீட்டில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டிருப்பதாக மும்பை கார்ப்பரேஷன் அந்த கட்டிடத் தை இடித்து தள்ளியது. அதை எதிர்த்து குரல் கொடுத்து வந்த நிலையில் போதை மருந்து பயன்படுத்தியதாக கங்கனா கொடுத்த பேட்டியை வைத்தே அவரை மடக்கப்பார்த்தது அரசு. கங்கனாவிடம் போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மும்பை யிலிருந்து தனது சொந்த ஊரானா மனாலிக்கு கமாண் டோ பாதுகாப்பு டன் திரும்பிச் சென்றார் கங்கனா.
அதன்பிறகு அதிகம் அரசியல் பேச்சை தவிர்த்து வந்த கங்கனா மீண்டும் மும்பைக்கு திரும்பினால் போதை மருந்து பற்றிய விசாரணையில் தன்னை கோர்த்து விடுவார்கள் என்று தயக்கம் காட்டி வருகிறார். இந்தநிலையில் தான் தமிழில் நடித்து வரும் ஜெயலலிதா வாழ்கை படமான தலைவி படப் பிடிப்பில் பங்கேற்க எண்ணி உள்ளார். இதற்காக ரகசியமாக பிருந்தா மாஸ்ட ருடன் நடன பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதுவும் வெளியில் தெரியா மலிருந்த நிலையில் பிருந்தா மாஸ்ட ரின் உதவியாளர் ஒருவர் நடன பயிற்சி யின்போது கங்கனாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி படத்தை நெட்டில் வெளியிட அது வைரலாகி வருகிறது.


சீக்கிரமே கங்கனா ரனாவத் தலைவி படப்பிடிப்பில் பங்கேற்க சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை