கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை திரைப்படமாகிறது.. போதை ஏற்றும் கண்களுடன் ஹீரோயினை தேடுகிறார்கள்..

Actress Silk Smitha Bip Pic Directed by Manigandan

by Chandru, Oct 3, 2020, 13:45 PM IST

1980, 90ம் ஆண்டுகள் தமிழ் திரையுலகின் பொற்காலமாகத் திகழ்ந்தது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ரிலீஸ் ஆகும். தியேட்டரில் கூட்டம் அலைமோதும் எம்ஜிஆர் தவிர சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட மற்றும் அதன்பிறகு வந்த எல்லா நடிகர்கள் படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் சில்க் ஸ்மிதா. அவரது கவர்ச்சியான உடல் தோற்றம், போதை ஏற்றும் கண்கள், அசத்தலான நடனம், மயக்கும் விழிகளும், ஆளை வீழ்த்தும் சிரிப்புக்கும் பல லட்சம் பேர் ரசிகர்களாக இருந்தனர். அவரது வாழ்க்கை வரலாறு முதன்முறை தமிழில் படமாகிறது.

80, 90களில் தென்னிந்தியத் திரைப் பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா படங்களிலும் ஒரு குத்தாட்டமாவது போடுவார்.சில்க் ஸ்மிதாவிற்கு முன்னாலேயே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை இவர்.

ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம்.கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை "அவள் அப்படித்தான்" என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்
பல விளம்பரப் படங்களை இயக்கிய வரும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

"சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் இப்படத்தின் இயக்குனரான மணிகண்டன். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை