இந்தியாவில் கொரோனா பலி ஒரு லட்சத்தைத் தாண்டியது.. 64 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..

Indias #COVID19 deaths cross one lakh mark.

by எஸ். எம். கணபதி, Oct 3, 2020, 13:32 PM IST

இந்தியாவில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது வரை மூன்றரை கோடி பேருக்கு நோய் பாதித்த நிலையில், 10 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

நோய்ப் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் 75 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்த நிலையில், 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 48 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்த நிலையில், ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தினமும் சுமார் 80 ஆயிரம் பேருக்குத் தொற்று பாதித்து வருகிறது. நேற்று புதிதாக 79,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 64 லட்சத்து 73,545 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இவர்களில் 64 லட்சத்து 27,707 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 9 லட்சத்து 44,996 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1069 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனாவல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை ஒரு லட்சத்து 842 பேர் பலியாகியுள்ளனர்.

You'r reading இந்தியாவில் கொரோனா பலி ஒரு லட்சத்தைத் தாண்டியது.. 64 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை