30 நாட்களில் சிம்பு நடித்து முடிக்கும் படம் படப்பிடிப்பு தொடங்கியது.. இயக்குனர் யார் தெரியுமா?

Simbhu In Director susendrans New Movie

by Chandru, Oct 5, 2020, 17:34 PM IST

கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. கடைசியாக கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு தடைபட்டது.

இந்நிலையில் மாநாடு படம் டிராப் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது அதைக்கண்டு கோபம் அடைந்த தயாரிப்பாளர் பதிலடி கொடுத்தார். யாரையும், எதையும் கேட்காமல் எங்கேயோ அமர்ந்து கொண்டு தவறான தகவல் வெளியிடுகிறார்கள் என்று அந்த செய்திக்கு கண்டனம் தெரிவித்துடன் கொரோனா முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடித்தார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
கொரோனா காலகட்ட தளர்வில் தற்போது சிம்பு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சிம்பு படம் என்றால் அதை முடிக்க தாமதம் ஆகும் என்ற பேச்சை கோலிவுட்டில் அவருக்கு பிடிக்காதவர்கள் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 30 நாட்களில் இப்படம் எடுத்து முடிக்கப்பட உள்ளது.
வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.


டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்க இப்படத்தை முதல் காப்பி அடிப்படையில் சுசீந்திரன் இயக்குகிறார். திண்டுக்கல்லில் இதன் ஷூட்டிங் இன்று தொடங்கியது. வரும் 8ம் தேதி முதல் சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இது சிம்புவுக்கு மட்டுமல்ல சிம்பு ரசிகர்களுக்கே வித்தியாசமான படமாக இருக்கும். கிராமத்து பின்னணியில் சிம்பு இது வரை நடிக்காத கதைக்களமாக இப்படம் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார். இவர் தற்போது வெளிவர தயாராக உள்ள ஜெயம் ரவியின் பூமி படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை