ஷூட்டிங்கிற்கு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. கபாலி டயலாக் பேசும் ஹீரோயின்..

Actress Anjali Return Back to Film Shooting

by Chandru, Oct 5, 2020, 20:05 PM IST

கொரோனா ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பல நட்சத்திரங்கள் தற்போது ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் உற்சாகமாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.


நடிகர்கள் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சிபி ராஜ், நடிகைகள் ராதிகா, டாப்ஸி என பலரும் ஷுட்டிங்கில் பிஸியாகி விட்டனர். சில சீனியர் நடிகர். நடிகைகள் மட்டும் இன்னும் கொஞ்சம் நாள் கழித்து ஷூட்டிங்கில் பங்கேற்க முடிவு செய்திருக்கின்றனர்.
நடிகை அஞ்சலி அனுஷ்காவுடன் இணைந்து நடித்த சைலன்ஸ் படம் சமீபத்தில் ஒடிடியில் வெளியானது. இதில் இருவருக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதையடுத்து ஷூட்டிங்கில் இன்று முதல் பங்கேற்றார். மேக் அப் அறையில் மேக் அப் அணியும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலி, படப்பிடிப்புக்கு திரும்ப வந்துட்டேன், உடன் பாதுகாப்பு உபகரணங்களும் தயார் என தெரிவித்திருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை