நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே போன்ற இளம் நடிகைகள் வரவால் காஜல் போன்ற சீனியர் நடிகைகளுக்கு மார்க்கெட் டல்லடிக்கிறது. கடந்த ஒரு வருடமாகவே காஜலுக்கு கல்யாணம் நடக்கவிருப்பதாக பரபரப்பாகப் பேசப் பட்டு வருகிறது. வீட்டிலும் அவரை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள்.
ஆனால் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வருவதால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்கிறார் காஜல்.கடந்த சில மாதங்களாக முன் காஜலுக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயார்த்தம் நடந்து விட்டதாகத் தகவல் பரவி வருகிறது. அதேபோல் நடிகர் ஒருவரை காஜல் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது.
சினிமா நடிகரை மணப்பீர்களா என்று காஜலிடம் கேட்டதற்கு. சினிமா துறையில் நடிகரையோ அல்லது வேறுயாரையுமோ நான் திருமணம் செய்ய மாட்டேன். இரண்டு டாக்டர்கள் திருமணம் செய்து கொண்டால் அது சரியாக இருக்காது என்பது பாலிசி. என் விஷயத்திலும் அது பொருந்தும். நான் எப்போது ஒருவரிடம் முழுவதுமாக என் இதயத்தைப் பறிகொடுக்கிறேனா அப்போது திருமணம் செய்துக் கொள்வேன் எனத் தெரிவித்தார்.
ஆனால் காஜல் அகர்வாலுக்குத் தொழில் அதிபர் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவுடன் திருமண நிச்சயார்த்தம் நடந்து விட்டதாக நெட்டில் தகவல் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதய வடிவ சிம்பல் பகிர்ந்திருக்கிறார் காஜல். விரலிலும் மோதிரம் அணிந்திருக்கிறார். அது நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறப்படுகிறது. தொழில் அதிபருக்கும் காஜலுக்கும் சீக்கிரமே திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை காஜல் அதை உறுதி செய்யவில்லை. இந்த தகவை அறிந்த நெடீஸன்கள் உங்கள் இதயத்தைக் கவர்ந்த காதலன் யார் எனக் கேட்டு வருகின்றனர். காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். இவருக்கு 7 வருடத்துக்கு முன்பே அதாவது 2013ம் வருடமே திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தையும் பெற்றுவிட்டார். தங்கைக்குத் திருமணம் ஆன பிறகும் காஜல் திருமணத்துக்குக் காத்திருப்பது ஏன் எனச் சிலர் கேட்கின்றனர்.காஜல் அகர்வால் தமிழில் இந்தியன் 2, ஹே சினமிகா மற்றும் தெலுங்கில் ஆச்சார்யா, மொசகல்லு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.