பிறந்த நாள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்திய ஹீரோ.. யாரும் வீட்டுக்கு வந்துவிடாதீர்கள்.

Dhruva Sarja requests fans not to come to his home to celebrate his birthday

by Chandru, Oct 6, 2020, 12:09 PM IST

கன்னட நடிகர் துருவா சர்ஜா. இவருக்கு இன்று 32 வது பிறந்த நாள். ஆனால் தனது பிறந்தநாளை கொண்டாட பெங்களூருவில் உள்ள எனது வீட்டுக்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.


டிவிட்டரில் துருவ சார்ஜா தனது பிறந்த நாளை கொண்டாட யாரும் வர வேண்டாம் என்று தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். கன்னடத்தில் அவரது ட்வீட் செய்திருக்கிறார். அதில், ரசிகர்கள் தான் எங்களுக்கு உணவளிக்கிறார்கள். என் பிறந்தநாளுக்காக நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் என் வீட்டிற்கு வருகிறீர்கள். உங்கள் அபிமானம் விவரிக்க முடியாதது. இந்த ஆண்டின் நிலவரம்பற்றி நாம் அனைவரும் அறிவோம். எந்த இடத்திலும் கொண்டாட்டம் இல்லை. என் வீட்டிற்கு யாரும் வர வேண்டாம் என்று உங்களிடம் கேட்பது கடினம். தயவு செய்து நீங்கள் எங்கிருந்தாலும் அங்கிருந்தே வாழ்த்துங்கள். உங்கள் விருப்பம் என்னைப் பாதுகாக்கிறது. ஜெய் அஞ்சநேயா என தெரிவித்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, துருவா தனது ரசிகர்களை அதிக கூட்டமாக கூட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். சமூக ஊடக பக்கங்கள் முழுவதும் அவரது தீவிர ரசிகர்களின் வாழ்த்துக்கள் நிரம்பி வழிகின்றன. வழக்கமாக, அவரது ரசிகர் சங்கங்கள் துருவாவின் பெயரில் நற்பணிகள் ஏற்பாடு செய்யப்படும். தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு இதுபோன்ற செயல்களைக் ரசிகர்கள் யாரும் செய்யவில்லை.


துருவ சர்ஜா மற்றும் அவரது மனைவி பிரேரண சங்கர் ஆகியோர் சமீபத்தில் தங்களின் மறைந்த மைத்துனர் சிரஞ்சீவி சார்ஜா மனைவி மேகனா ராஜுக்கு நடந்த வளைகாப்பு விழாவில் பங்கேற்றனர். இதில் மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் 10 அடிக்கு உயரமான கட் அவுட் வைத்து அதன் அருகில் மேக்னா அமர்ந்திருந்தார்.
மேலும், 39 வயதிலேயே மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் இழப்பை துருவாவும் அவரது குடும்பத்தினரும் இன்னும் மறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அவர் மாரடைப்பு காரணமாக கடந்த ஜூன் 7ம் தேதி அன்று காலமானார். சிரஞ்சீவியின் மனைவி மேக்னா ராஜ் இந்த ஆண்டு முதல் குழந்தையைப் விரைவில் பெற்றெடுக்க உள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை