புதிய படம் பார்க்க வீட்டிலேயே பாப்கார்னுடன் ரெடியாக சொன்ன ஹீரோ.. ஒடிடியில் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ.

Akshay Kumar-starrer Laxmmi Bomb, is all set to release on Disney+Hotstar on November 9.

by Chandru, Oct 6, 2020, 12:44 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழில் இயக்கி நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் லஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி உள்ளார். இதில் அக்‌ஷய் குமார் திருநங்கை வேடத்தில் நடித்திருக்கிறார்.


இப்படம் தியேட்டரில் வெளியிட இருந்த நிலையில் கொரோனா தொற்றால் தியேட்டர்கள் மூடப்பட்டது. தியேட்டர் திறப்புக்கு காத்திருந்து பார்த்து பலனில்லாததால் ஒடிடி தளத்தில் வெளியிட முடிவானது செப்டம்பர், அக்டோபரிலேயே ஒடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தியேட்டர் திறப்பு பற்றி பேச்சு எழுந்தது. இதையடுத்து மீண்டும் ஒடிடி ரிலீஸை நிறுத்தி தியேட்டரில் ரிலீஸுக்கு காத்திருந்தனர். ஆனால் மீண்டும் தியேட்டர் திறப்பு தள்ளிப்போனதால் கடைசியாக வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது.


ஒடிடியில் படம் ரிலிஸ் ஆவதை வித்தியாசமனமுறையில் வீடியோவில் விளம்பரம் செய்திருக்கிறார் அக்‌ஷய். வீட்டில் உள்ளவர்களை பாப்கார் உடன் தயார் ஆகச் சொல்கிறார். இருக்கும் வேலைகளை அவசரமாக முடித்து டிப்டாப் ஆக உடை அணிந்து பாப்கார்னும் கையுமாக பர்ஸ்ட்டே பர்ஸ்ட் ஷோ பார்க்க தயாரகிறார்கள். அவர்கள் அனைவரும் டிவி முன் அமர அக்‌ஷய் குமார் டிவி ஒடிடி தளத்தில் லக்‌ஷ்மி பாம் படத்தை ஓட விடுகிறார். இந்த ருசிகர வீடியோவை அக்‌ஷய் குமார் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை