வெற்றிகரமாக 3 வது திருமண விழாவை கொண்டாடும் பிரபலங்கள்..சமந்தா தனது கணவருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி

samantha celebrating a 3rd anniversary today

by Logeswari, Oct 6, 2020, 16:17 PM IST

தமிழ்,தெலுங்கு போன்ற மொழியில் முன்னனி கதாநாயகனாக விளங்குபவர் சமந்தா.இவர் பானா காத்தாடி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாகினார்.இவரின் நடிப்பு தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு ஈர்ப்பை பெற்றது.இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் நாகசைத்தன்யாவை காதலித்து வந்தார்.இதையடுத்து இருவரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது.திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் இன்றும் வைரலாகி வருகின்றது.இருவரும் சினிமாவில் ஒன்று சேர்ந்து கடைசியில் ரியல் ஜோடியாகவே மாறிவிட்டனர்.திருமணம் ஆகினாலும் சமந்தா திரைப்படத்தில் நடித்து கொண்டு தான் இருக்கிறார்.சில நாட்களுக்கு முன் சமந்தா கர்ப்பமாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.ஆனால் சமந்தா எவையும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் சமந்தா மற்றும் நாகசைத்தன்யா ஆகிய இருவரும் தங்களது 3 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.இதனையொட்டி சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் உனது.. நீ எனது.. என்றும் எந்த கதவாக இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து திறப்போம்..இனிய திருமண நாள் வாழ்த்துகள் கணவரே என்று தங்களது புகைப்படத்துக்கு கீழே பதிவு செய்து தனது கணவரை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை