கொரோனாவால் சின்னா பின்னமாகும் வாழ்க்கை... மதுவுக்கு அடிமையாகும் பெண்கள்...!

by Nishanth, Oct 6, 2020, 17:19 PM IST

கொரோனா காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள பெண்கள் மதுவுக்கு அடிமை வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப் போட்டுவிட்டது. வேலை இழந்தும், சம்பளம் இழந்தும் பலர் தவித்து வருகின்றனர். எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவங்கள் பலரது மனதையும் கடுமையாக பாதித்து விட்டது. குடும்பங்களிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகிவிட்டன.

இந்த 6 மாதங்களில் கோர்ட்டுக்கும், போலீஸ் நிலையங்களுக்கும் சென்ற குடும்ப வழக்குகள் ஏராளம். வேலை இழந்த, வருமானம் இழந்த பலர் தற்கொலை முடிவுக்கும் சென்றனர்.ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும், குழந்தைகளும் கூட மனதளவில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் ஜமா நெட்வொர்க் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களின் மது பயன்பாடு பெருமளவு உயர்ந்தது தெரியவந்துள்ளது. லாக்டவுன் தொடங்கிய சமயத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அப்போது மது கிடைக்காமல் பலர் தற்கொலைக்கு முயற்சித்தனர். ஆனால் பின்னர் மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மது பயன்பாடு 21 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 2 மணி நேரத்திலும் ஆண்கள் 5 பெக் வரையும், பெண்கள் 4 பெக் பேரையும் குடிக்கின்றனர்.

கடந்த வருடத்தை விடக் கூடுதலாக 0. 8% பெண்கள் இந்த லாக்டவுன் காலத்தில் மதுவைப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த வருடம் மாதத்திற்குச் சராசரியாக 4.6 நாட்கள் பெண்கள் மது குடித்தனர். ஆனால் தற்போது இது 5.4 நாட்களாக உயர்ந்துள்ளது என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get your business listed on our directory >>More India News