வரவிருக்கும் பண்டிகை காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவை வழங்க இந்தியா முழுவதிலும் 1 இலட்சத்திற்கும் அதிகமான உள்ளூர் கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் போன்றவற்றுடன் இணைந்து செயல்பட அமேசான் திட்டமிட்டுள்ளது. " அமேசானின் உள்ளுர்" கடைகள் எனும் திட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறைக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் இதுவரை இணைந்துள்ளன. இவர்கள் முதன்முறையாக " கிரேட் இந்தியன் பெஸ்டிவல்" விற்பனையில் பங்கேற்கின்றனர்.
இந்த கடைகள் தங்கள் பகுதிகளிலும், இந்தியா முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவு உள்ளிட்ட தினசரி அத்தியாவசிய பொருட்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை, அலங்கார பொருட்கள், பரிசுகள் மற்றும் பூக்கள் வரை விற்பனை செய்யலாம்.இந்த திட்டத்தைத் தொடர்ந்து அமேசான் ஈஸிஇ ஐ ஹவ் ஸ்பேஸ் மற்றும் அமேசான் பேஸ்மார்ட் ஸ்டோர்ஸ் போன்ற முயற்சிகள் மின்னணு வணிகத்தை இந்நிறுவனத்தின் செயல்பாடுகளுடன் இணைக்கும் திட்டமாகும்.