சூப்பர் ஸ்டார் அண்ணாத்த ஷூட்டிங்கில் மீண்டும் திடீர் மாற்றம்.. என்ன நடந்தது தெரியுமா?

Annatha Movie Shooting Postponed again

by Chandru, Oct 7, 2020, 12:31 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்குகிறார். குடும்ப பின்னணியில் சென்டிமென்ட் கலந்து கிராமத்து படமாக இது உருவாகிறது. இதில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முறைப்பெண்களாக குஷ்பு, மீனா நடிக்கின்றனர்.
அண்ணாத்த படப்பிடிப்பு தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்துடன் வேகமாக படப்பிடிப்பு நடந்து வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் ஷூட்டிங் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன கடந்த 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியது.


ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பும் தொடங்க திட்டமிடப்பட்டது, இந்த மாதம் அக்டோபரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இசிஆர் சாலை பக்கம் செட் அமைக்கப்பட்டது. ஏற்கனவே ரஜினிகாந்த் தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள தாமதமாகும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அவர் நடிக்கும் காட்சிகள் இல்லாமல் மற்ற நடிகர்கள் காட்சிகளை படமாக்க எண்ணினர். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் காட்சிகள் படமாகும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில் ரஜினியை உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டாம் என்று அவரது நண்பர்கள் ஆலோசனை சொன்னார்களாம். அதை கருத்தில் கொண்டு ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்பதை மீண்டும் தள்ளிப்போட்டிருக்கிறாராம். ரஜினிகாந்த்.
இயக்குனர் சிவாவும் ரஜினி பங்கேற்காமல் ஷுட்டிங் தொடங்குவதற்கு தயக்கம் காட்டிவருகிறார். இதையடுத்து ;அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப்போகும் என்று பட குழு தரப்பில் பேச்சு எழுந்துள்ளது. தீபாவளி முடிந்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை