கருணாஸுடன் ஜோடி சேரும் கும்கி நடிகை !!சூட்டிங் ஸ்பாட்டில் வெளியான புகைப்படங்கள்..

karunas and lakshmi menon photo in shooting spot trending news

by Logeswari, Oct 7, 2020, 15:33 PM IST

கடந்த 2008 ஆம் ஆண்டு கருணாஸ் நடித்த திண்டுக்கல் சாரதி திரைப்படம் வெளியானது.இதில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தில் நடித்த கருணாஸின் நடிப்பு மிகவும் சிறப்பாக பேசப்பட்டது.இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியதால் மக்கள் திண்டுக்கல் சாரதி அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்தனர்.இந்நிலையில் நேற்று லட்சுமி மேனனுடன் கருணாஸ் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இவர்களின் ஜோடியாக வெளியான புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து மறுபடியும் கருணாஸின் காமெடி கலாட்டாவை பார்க்க காத்து கொண்டு இருக்கிறோம் என்று வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இதனால் மக்கள் திண்டுக்கல் சாரதி-2 படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்தனர்.ஆனால் லட்சுமி மேனன் இந்த புகைப்படம் 'கொம்பன்' படப்பிடிப்பில் எடுத்தது என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இதனால் மக்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.இந்நிலையில் லட்சுமி மேனன் முத்தையா இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் விஜய் பிரபுவுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை