சிங்கம் பட ஹீரோ சகோதரர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..

Actor Ajay Devgan Brother Passes away

by Chandru, Oct 7, 2020, 15:05 PM IST

நடிகர் சூர்யா நடித்த படம் சிங்கம். ஹரி இயக்கி இருந்தார். இப்படத்தை இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்தனர். சூர்யா தமிழில் ஏற்று நடித்த வேடத்தை இந்தியில் அஜய்தேவ்கன் ஏற்று நடித்தார். தமிழைப்போலவே இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அஜய்தேவ்கன் சகோதரர் அனில் தேவ்கன். இவர் நேற்று இரவு திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் அஜய் தேவ்கனையும் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அஜய் தேவ்கன் தனது சமூக வலைத் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள மெசேஜில்.எனது சகோதரர் அனில் தேகனை இழந்திருக்கிறேன். அவரது மறைவால் குடும்பத்தினர் அனைவரும் இதயம் உடைந்திருக்கிறோம். அவரை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். கொரோனா ஊரடங்கால் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை கூட்டம் எதுவும் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என தெரிவித்திருக்கிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை