அஜீத்துடன் நடிக்கும் விஜய்யின் ரீல் மகன்..

Vijays Reel Son become Ajth Son in new movie

by Chandru, Oct 7, 2020, 14:37 PM IST

ரொமாண்டிக்காக காதலியுடன் டூயட் பாடி நடித்துக் கொண்டிருந்த கதைகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு விஜய், அஜீத் தற்போது பக்குவப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். விஸ்வாசம், என்னை அறிந்தால் எனப் பல படங்களில் தொடர்ந்து ஒரு குழந்தைக்குத் தந்தையாகவே அஜீத் நடித்து வருகிறார்.விஜய்யும் மெர்சல் படம் முதல் பிகில் படம் வரை ஒரு குழந்தைக்குத் தந்தையாகவே நடித்து வருகிறார். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பஞ்சம் வைப்பதில்லை.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். இதனை ஸ்ரீதேணாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது. இதில் விஜய்யின் மகனாக அக்சத் தாஸ் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்தார். படு சுட்டியாக நடித்திருந்த அக்சத் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது சீக்கிரமே தல அஜீத் படத்தில் நடிக்கிறேன் என்றார். அஜீத் தற்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிக்கிறார். அநேகமாக இந்த படத்தில் அஜீத் மகனாக மெர்சலில் விஜய் மகனாக நடித்த ரீல் மகன் அக்சத் நடிப்பார் என்று தெரிகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை