பிரபல ஹீரோ, இயக்குனர் ஆகிறார்.. காமெடி நடிகர் உடைத்த சீக்ரெட்..

Actor Jayam Ravi Plan To Direct a film

by Chandru, Oct 8, 2020, 12:20 PM IST

கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ஹீரோக்களில் சிலருக்கு இயக்குனர் ஆகும் எண்ணம் உள்ளது. கமல்ஹாசன், அர்ஜூன் போன்ற நடிகர்கள் ஏற்கனவே படங்கள் இயக்கி உள்ளனர், அடுத்து வல்லவன் படத்தைச் சிம்பு இயக்கினார். தற்போது துப்பறிவாளன்2 ம் பாகம் படத்தை விஷால் இயக்க உள்ளார். இவர் அர்ஜூனிடம் உதவி இயக்குனரா பணி புரிந்தவர். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் நடிகர் கார்த்தி. அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது மற்றொரு ஹீரோவுக்கும் இயக்குனர் ஆசை உள்ளது. அவர் வேறு யாருமல்ல நடிகர் ஜெயம் ரவி. இவரது அண்ணன் மோகன்ராஜா இயக்குனராக ஜெயம் படம் தொடங்கித் தனி ஒருவன் வரை பல படங்கள் இயக்கி உள்ளார். அவரது பெரும்பாலான படங்களில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தார்.

கோமாளி படத்தில் நடித்த ஜெயம் ரவியுடன் காமெடி நடிகர் யோகி பாபு நடித்தார். அப்போது யோகிபாபுவிடம் தனது இயக்குனர் எண்ணத்தை வெளிப்படுத்தியதுடன் ஒரு கதையும் சொல்லி அசத்தி இருக்கிறார். அதில் நடிக்க யோகிபாபுவும் ஒகே சொல்லி இருக்கிறார். ஜெயம் ரவி தேர்வு செய்த படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அதில் ஒன்றிரண்டு படங்கள் கமர்ஷியல் படமாக இருந்தாலும் பல படங்கள் குறிப்பிடத்தக்க கதை அம்சமுள்ள படங்களாகவே இருக்கிறது.

ஹீரோவாக அறிமுகமாகும் முன், கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்' படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவி இயக்குநராக ஜெயம் ரவி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஆகும் எண்ணத்தில் இருக்கும் ரவி ஒரு சில ஸ்கிரிப்ட் ரெடி செய்து வைத்திருக்கிறார். இது அவரது மகுடத்தில் மற்றொரு வைரக் கல்லாகப் பதியும் என எதிர்பார்க்கப்படுகிறது.தான் இயக்குனர் ஆகவுள்ள எண்ணத்தை ஜெயம் ரவி வெளிப்படுத்தியது பற்றி யோகிபாபு கூறும்போது,தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பிஸியாக இருப்பதால் இயக்குநராக அறிமுகமாக அதற்கான நேரம் பார்த்துக் காத்திருக்கிறார். அவர் தனது படத்தை இயக்கத் தொடங்கும்போது அவரது படத்தில் முக்கிய பாத்திரம் தருவதாகக் கூறி இருக்கிறார் என யோகி பாபு தெரிவித்தார்.

யோகி பாபுவை பொறுத்தவரை நகைச் சுவை நடிகர்களுடன் தனது திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார், குறிப்பாக அவர் நடிகர் கவுண்டமணியுடன் நடிக்க விரும்புகிறார். யோகி பாபு கையில் பல படங்கள் உள்ளன, மேலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை