இனி அமேசான் மூலமும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்... 10-12% வரை தள்ளுபடி..!

by Nishanth, Oct 8, 2020, 12:24 PM IST

பஸ், விமான டிக்கெட்டுகளை தொடர்ந்து இனி ரயில் டிக்கெட்டையும் அமேசான் மூலம் முன்பதிவு செய்யலாம். முதல் புக்கிங்கில் 10 முதல் 12 சதவீதம் வரை பணம் திரும்பக் கிடைக்கும்.'அமேசான் பே' மூலம் ஏற்கனவே பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. தற்போது ரயில் டிக்கெட்டுகளையும் அமேசான் பே மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்திற்கும், ஐஆர்டிசிக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி முதல் புக்கிங்கில் 10 சதவீதம் பணம் திரும்பக் கிடைக்கும். அதாவது அதிகபட்சமாக 100 ரூபாய் வரை பணம் கிடைக்கும். அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு 12 சதவீதம் வரை பணம் திரும்பக் கிடைக்கும். அதாவது அதிகபட்சமாக 120 ரூபாய் வரை நம்முடைய அக்கவுண்டுக்கு பணம் திரும்ப வந்துவிடும்.
ரயிலில் எல்லா வகுப்புகளிலும் உள்ள சீட்டுகள் மற்றும் பெர்த்துகள் எவ்வளவு காலியாக உள்ளன என்பது குறித்த விவரங்களை அமேசான் செயலி மூலம் நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் லைவ் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை பதிவிறக்கம் மற்றும் ரத்து செய்வதற்கான வசதிகளும் அமேசான் செயலியில் உண்டு.
அமேசான் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்பதிவை ரத்து செய்தாலோ, முன்பதிவு செய்யும்போது தொழில்நுட்ப கோளாறு மூலம் பணத்தை இழக்க நேரிட்டாலோ உடனடியாக ரீபண்ட் கிடைக்கும்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Special article News