தமிழ் ஹீரோக்கள் நடித்தது உள்பட 9 படங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

Nine highly-anticipated movies across 5 Indian languages

by Chandru, Oct 9, 2020, 13:02 PM IST

தமிழ், இந்தி. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 அற்புதமான படங்கள் உள்ளன. அமேசான் ப்ரைம் வீடியோ மொத்தமாக நேரடி-டிஜிட்டல் சேவையில் 19 திரைப்படங்களுக்கு வழங்க இருக்கிறது.வருண் தவான் மற்றும் சாரா அலிகான் நடித்த கூலி நம்பர் 1, ராஜ்குமார் ராவ் நடித்த சலாங், பூமி பெட்னேக்கரின் துர்காவதி, ஆனந்த் தேவரகொண்ட நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), மாதவன் நடித்த மாரா (தமிழ்), பீமா சேனா நளமகாராஜா மற்றும் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்), இந்த படங்கள் 2020 அக்டோபர் 15 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும்.

அமேசான் ப்ரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9 திரைப்படங்களை நேரடியாக ஸ்டீரிமிங் செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளது. 5 இந்திய மொழிகளில், மாறுபட்ட அம்சங்களை உடைய, வருண் தவான் நடிக்கும் (ஜட்வா 2, ஸ்ட்ரீட் டான்சர் 3 டி) மற்றும் சாரா அலிகானின் (சிம்பா), ராஜ்குமார் ராவ் (டிராப்ட், ஸ்ட்ரீ) மற்றும் நுஷ்ரத் பருச்சாவின் ( சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி), பூமி பெட்னேகரின் துர்காவதி (சுப் மங்கல் சவ்தான், டாய்லெட்: ஏக் பிரேம் கதா), அரவிந்த் ஐயர் நடித்த பீமா சேனா நளமகாராஜா (கன்னடம்), ஆனந்த் தேவர கொண்டா நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), ஆர். மாதவனின் மாரா (தமிழ்). மற்றும் வர்ஷா போலம்மா (பிகில்) நடித்த மன்னே நம்பர் 13, சேதன் கந்தர்வா (மெலடி) இவைகள் அனைத்தும் முன்னர் அறிவிக்கப்பட்ட சகாரியா முகமதுவின் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்) மற்றும் சூர்யா நடித்த சூரரைப் போற்று (தமிழ்), சேதன் கந்தர்வா (மெலடி) நடித்த மன்னே எண் 13 (கன்னடம்) படங்களும் வெளி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களான பெண்குயின், பொன்மகள் வந்தாள், லா, பிரெஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும், சி யு சூன், வி மற்றும் நிஷப்தம் போன்றவை சொந்த மாநிலங்களைத் தவிர்த்து வெளி மாநிலங்களான லக்னோ, கொல்கத்தா, புனேவிலிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றன.

180 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள தொலைக்காட்சி பார்வையாளர்களால் இந்த திரைப்படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு ரசிக்கப்பட்டன, ப்ரைம் வீடியோவின் உலகளாவிய பிரீமியர்கள் இந்தியத் தயாரிப்பாளர்களை இன்னும் அதிக பார்வையாளர்களிடம் சென்றடைய வைத்தது. ப்ரைம் வீடியோ இந்தியாவில் வெளியிட்ட இந்தி படங்களான குலாபோ சிட்டாபொ & சகுந்தலா தேவி ஆகியவை வெளியிடப்பட்ட நாளிலிருந்து அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களாக இருக்கின்றன. குலாபோ சிட்டாபொ மற்றும் சகுந்தலா தேவி ஆகிய இரண்டு படங்களும் உலகளவில் பிரைம் வீடியோவில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தி திரைப்படங்கள்!அமேசான் பிரைம் வீடியோவின் நேரடி டிஜிட்டல் வெளியீடுகள்: ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்) , இது அமேசான் ப்ரைம் வீடியோவில் அக்டோபர் 15 ஆம் தேதி திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சகாரியா முகமது இயக்கத்தில் வரவிருக்கும் மலையாள நகைச்சுவைத் திரைப் படமான ஹலால் லவ் ஸ்டோரியில் இந்திரஜித் சுகுமாரன், ஜோஜு ஜார்ஜ், ஷரஃப் யு தீன், கிரேஸ் ஆண்டனி மற்றும் சவுபின் ஷாஹிர், பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பீமா சேனா நளமஹராஜா (கன்னடம்)அமேசான் ப்ரைம் வீடியோவில் அக்டோபர் 29 ஆம் தேதி திரையிடப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. கார்த்திக் சரகூர் இயக்கிய கன்னட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தான் பீமா. சூரரைப் போற்று (தமிழ்), அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 30 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாக இருக்கும் அதிரடி தமிழ்ப் படம் சூரரைப் போற்று. சூர்யா கதாநாயகனாக நடிக்க அபர்ணா பால முரளி , பரேஷ் ராவல் மற்றும் மோகன் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை சூரியாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் குனீத் மேங்காவின் சீக்கியா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட “சிம்பிள் ஃப்ளை” புத்தகத்தின் கற்பனையான பதிப்பாகும்.

சலாங் (இந்தி), நவம்பர் 13 ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மன்னே நம்பர் 13 (கன்னடம்), அமே சான் ப்ரைம் வீடியோவில் நவம்பர் 19 ஆம் தேதி திரையிட திட்டமிடப் பட்டுள்ளது.மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 20 ஆம் தேதி திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.துர்காவதி (இந்தி), அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் 11 ஆம் தேதி திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.மாரா (தமிழ்), பிரைம் வீடியோவில் டிசம்பர் 17 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.மாரா படத்தை திலீப் குமார் இயக்குகிறார். தமிழ் மொழி ரொமாண்டிக் டிராமாவாக இந்தப் படம் இருக்கும். பிரமோத் பிலிம்ஸின்ஸ்ருதி நல்லப்பா மற்றும் பிரதீக் சக்ரவர்த்தி ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கூலி நம்பர் 1 (இந்தி), அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 25 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை