ஜெயிலுக்கு சென்ற நடிகரின் காதலிக்கு ரஜினி நடிகை திடீர் சப்போர்ட்..

by Chandru, Oct 10, 2020, 19:22 PM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் சுஷாந்த் தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக சுஷாந்த் காதலி, நடிகை ரியா மீது புகார் கூறப்பட்டது. போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் ரியாவை விசாரித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.ரியா கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போதை மருந்து விவகாரத்தில் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் ரியா தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செசன்சு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. பிறகு ஒரு மாதமாக அவரது வழக்கைச் சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. மீண்டும் ரியா ஜாமீன் வழக்கு விசாரனைக்கு வந்தபோது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. போதை மருந்து விவகாரத்தில் கைதான ஒரு மாதத்துக்குப் பிறகு ரியா ஜாமீனில் வெளிவருகிறார்.ரியாவுக்கு நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரூ 1 லட்சம் ரொக்க கட்ட வேண்டும், சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு வீட்டுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்குச் சென்று 10 நாட்கள் கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சுஷாந்த் தற்கொலை வழக்கையொட்டி நடந்த போதை மருந்து வழக்கில் ரியா சக்ரபோர்த்தி கைதாகி ஒரு மாதம் சிறையிலிருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் நடிகை ஹூமா குரேசி. இந்தி நடிகையான இவர் ரஜினிகாந்த் நடிக்க ப.ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர்.


ஹூமா குரோஷி தனது சமூக வலைத் தள பக்கத்தில். ரியா சக்ரபோர்த்தியிடம் எல்லோரும் மன்னிப்புக் கேட்க வேண்டும். கொலைச் சதி பற்றிப் பேசிய நபர்கள் எல்லோர் மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் . ஒரு பெண்ணின் குடும்ப வாழ்க்கையை நாசமாக்கி உங்களின் எண்ணத்தை நிறைவேற்றுகிறீர்கள். அதை எண்ணி நீங்கள் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என காட்டமாகத் தெரிவித்திருக்கிறார் ஹூமா குரோசி.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News