கிரிக்கெட் வீரர் வேடத்தில் நடிக்க பிரபல நடிகருக்கு இயக்குனர் எதிர்ப்பு..

Director seenu ramasami request vijaysethupathi not to act in muththaya Bio pic

by Chandru, Oct 10, 2020, 19:28 PM IST

கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வெளியாகி திரைக்கு வந்து வெற்றி பெற்றன. இப்படங்கள் இந்தி ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணியில் கிரிக்கெட் வீரராக இருந்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம் உருவாக்க முடிவானது. அதில் நடிக்க சில ஹீரோக்கள் மறுத்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் இருந்தவர் முத்தையா அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக் கூடாது என்று பலரும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்படத்தின் பப்ளிசிட்டி அடங்கி இருந்தது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி ஒரு டிவிட்டர் மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய் சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்குச் சான்று.ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா..
நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற்கு மாத்தையா?.. மாற்றய்யா? என தெரிவித்திருக்கிறார்.

இதில் சீனு ராமசாமி மறைமுகமாக கிரிக்கெட் வீரர் முத்தையா படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாக பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அவர் நடித்த க/பெ ரணசிங்கம் படம் சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியானது. அடுத்து ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை