கொரோனா சேவை செய்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று.. ஐசியுவில் அனுமதி..

Actress cum Nurse Tested COVIT19 Positive

by Chandru, Oct 10, 2020, 19:35 PM IST

கொரோனா தொற்று மக்களை இன்னும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. பல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிசேஷக் பச்சன், விஷால் , கருணாஸ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன், ராஜமவுலி என ஒரு நீண்ட பட்டியலே கொரோனா தொற்றுக்குள்ளானவர் பெயர்கள் இருக்கிறது. நடிகை தமன்னா தற்போது கொரொனா தொற்றுக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்றுக்குப் பயந்து மேலும் பல நடிகைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். 5 மாதத்துக்கு பிறகே ஷூட்டிங்கிற்கு பங்கேற்கத் தலை காட்டுகின்றனர். ஆனால் ஒரு நடிகை இருக்கிறார். ஷூட்டிங்கையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டுத் தான் பார்த்து வந்த நர்ஸ் வேலைக்குத் திரும்பி கொரோனா சேவையில் ஈடுபட்டார். அவர் பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா.நடிப்பிலிருந்து விலகிக் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அவர் ஏற்கனவே பணியாற்றிய மருத்துவமனையில் நர்ஸாக சேர்ந்தார்.

ஓய்வு எதுவும் எடுக்காமல் கடந்த 6 மாதமாகக் கடுமையாக உழைத்து வந்தார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆக்ஸிஜன் அளவும் குறைந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருகிறார். இதையறிந்து ரசிகர்கள் சோகம் அடைந்தனர். அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை