நாய்க்கு ஹேஷ் டேக் போட்ட நடிகை.. ரொம்ப மிஸ் செய்கிறேன்.

by Chandru, Oct 11, 2020, 09:50 AM IST

நடிகர் நடிகைகள் பலர் செல்ல பிராணிகள் வளர்க்கின்றனர். பெம்பாலும் வெளிநாட்டு நாய்கள்தான் அவர்களின் செல்லமாக இருக்கிறது. ஆனால் நடிகை சாய் தன்ஷிகா சற்று வித்தியாசமானவர்.

ரஜினியின் கபாலி படத்தில் அவரது மகளாக நடித்தார் தன்ஷிகா. ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் காலா படம் தன்ஷிகாவுக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்ததுடன் அவரை ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் நடிகையாக திரையுலகினருக்கும், ரசிகர்களும் அடையாளம் காட்டியது. அதை பயன்படுத்தி தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோயினாக்க வேண்டும் என்ற கனவு தன்ஷிகாவுக்கு உள்ளது. தன்ஷிகா கடந்த ஆண்டு முதல் தனது பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார். அவர் தனது செல்ல நாய்க் குட்டி பற்றி சமூக வலைதளத்தில் உருக்கமான ஒரு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார். அதில்,என்னுடைய முதல் நாய்க்குட்டி மீது நான் மிகவும் அன்பும் பாசமும் இவைத்திருக்கிறேன். அந்த முதல் நாள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. உன்னை (நாய்) தெருவில் கண்டெடுத்தேன். அந்த நொடி முதல் உன் மிது பாசம் பொழிய ஆரபித்துவிட்டேன், அதனுடைய கண்ணீர் கலங்கிய கண்களைப் பார்த்தேன். வளர்க்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து என் வீட்டுக்கு கொண்டு வந்தேன். அது பார்த்த பார்வையில் எனக்கு வாழ்க்கையின் தேவை என்ன என்பதை எந்தளவுக்கு புரிய வைத்தது என்பதை அளவிட்டு சொல்ல முடியாது. உன் நினவுகளை என் நினைவில் எப்போதும் வைத்திருப்பேன். இன்று வரை அந்த நினைவை மறக்காமல் வைத்திருக்கிறேன்.

உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன், உன் மீதான காதல் என்றும் மறாது, என்னுடைய முதல் குழந்தை நீ தான். இவ்வாறு சாய் தன்ஷிகா தெரிவித்திருக்கிறார். சாய் தனிஷிகா தற்போது, யோகிடா, லாபம், கிட்னா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Get your business listed on our directory >>More Cinema News