அந்த படத்தை தடை செய்யனும்.. பிரபல இயக்குனர் காட்டம்.

Ban On Irandam kuthu movie

by Chandru, Oct 11, 2020, 12:56 PM IST

இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அடுத்து இரண்டாம் குத்து; என்ற அடல்ட் திரில்லர் படத்தை இயக்குகிறார். இது இருட்டறையில் முரட்டு முத்து படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது. இரண்டாம் குத்து பட போஸ்டர் ஆபாசமாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த போஸ்டருக்கும் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமாருக்கும் இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். அதில் சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? "இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?

இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருந்தார். பாரதிராஜாவின் கண்டனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இயக்கிய டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இதை பார்த்து கண் கூசவில்லையா என்று பாரதிராஜாவை திருப்பி கேட்டார் சந்தோஷ் பி ஜெயகுமார், இது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சந்தோஷ் பி ஜெயகுமார் மீது நெட்டீஸன்கள் திட்டி தீர்த்தனர். எதிர்ப்பு வலுக்கவே சரண்டர் ஆனார் சந்தோஷ். இயக்குனர் பாரதிராஜாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதில், அடுத்து வரும் போஸ்டர்கள் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என சந்தோஷ் வாக்குறுதி அளித்தார்.

தற்போது பிரபல இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள மெசேஜில் இரண்டம் முத்து போன்ற ஆபாச படங்களை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறி உள்ளார். அவர் கூறும்போது,மக்கள் இதுபோன்ற படங்களை புறந்தள்ளினால் போதும்.. ஏற்கனவே முதல் குத்துக்கு கலெக்‌ஷனை அள்ளிக்கொடுத்ததால் தான் இந்த தைரியம் வருது... ஆனாலும் அந்த போஸ்டர் அருவருப்பான ஆபாசம்.. கண்டிப்போம்.. இனியாவது வேற்றுப்போம்.. அரசும் இதுபோன்ற படங்களை தடைசெய்யனும் என தெரிவித்திருக்கிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை