நீ இந்த ஸ்டைலெல்லாம் பண்ணாதே.. ஹீரோவுக்கு லிஸ்ட் கொடுத்த இயக்குனர்.

by Chandru, Oct 11, 2020, 14:12 PM IST

சில ஹீரோக்களுக்கென்று தனி ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். அந்த ஸ்டைலை பண்ணுங்க என்றுதான் ஹீரோவிடம் இயக்குனர்கள் கேட்பார்கள். ஆனால் ஒரு இயக்குனர் பெரிய லிஸ்ட் போட்டு வைத்துக்கொண்டு இந்த ஸ்டைலெல்லாம் பண்ணக் கூடாது என்று ஹீரோவுக்கு பிரஷர் கொடுத்தார் ஒரு இயக்குனர். அவர் வேறுயாருமல்ல சுஷா கொங்கரா. சூர்யா நடிக்கும் சூரரைபோற்று படத்தை இயக்கி உள்ளார்.

சூர்யா நடித்திருக்கும் சூரரைப் போற்று படம் இந்த மாதம் இறுதியில் ஒடிடி தளத்தில் வெளியாகிறது, இந்த படத்தின் ஒர்க்கிங் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. தற்போது 2வது வீடியோவை இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா, சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் ஆகியோரின் பேட்டி இடம் பெற்றுள்ளது. சூர்யா கூறும்போது, வாத்தியார் பையன் ஒருவன் வெறும் 6 ஆயிரம் ரூபாய் கையில் வைத்துக்கொண்டு ஏர் லைன் ஆரம்பிக்கப்போகிறேன் என்று புறப்படுகிறான். அது நடக்க கூடிய காரியமா? அப்படி புறப்பட்ட ஒருவரின் கதை தான் சூரரைப்போற்று. இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து இது மாறுபட்டிருக்கும். என்னிடம் இயக்குனர் சுதா முதலிலேயே நீ இந்த ஸ்டைலெல்லாம் செய்யக்கூடாது என்று ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்துவிட்டார்.

அதெல்லாம் செய்யாமல் நடித்தது புது அனுபவமாக கூட இருந்தது . இதுவரை நான் நடித்த படங்கள் எதிலும் இல்லாத வகையில் இந்த படத்தில் ஸ்கிரிப்ட் ரீடிங் என்ற செஷன் வைத்தார்கள். ஒவ்வொருவரும் ஸ்கிரிப்டை படித்து அதை எப்படி பேச வேண்டும் என்று பேசிக் காட்டினார்கள். இவ்வாறு சூர்யா கூறினார். டைரக்டர் சுதா கொங்கரா கூறும்போது, 10 வருடத்துக்கு முன் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை கதையை படித்தேன். அதை படமாக்கி சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். சூரரைப் போற்று படமாக அது உருவாகி இருக்கிறது. இதில் மாறா என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்காக ஸ்பெஷல் காஸ்டிமெல்லாம் எதுவும் சூர்யாவுக்கு தைக்க வில்லை மற்றவர்களுக்கு என்ன காஸ்டியூமோ அதுதான் சூர்யாவுக்கும் தைக்கப்பட்டது. கறுப்பு சட்டையை அடையாளம் காண பட்டனில் மட்டும் சில குறியீடுகள் வைக்கப்பட்டது என்றார்.

Get your business listed on our directory >>More Cinema News