பிகில் நடிகை தானே வைத்துக்கொண்ட பட்டப்பெயர்..

People recognise me as Thendral: Amrita Amritha Aiyer

by Chandru, Oct 12, 2020, 11:51 AM IST

விஜய் நடித்த பிகில்; படத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர். இப்படத்தில் தென்றல் என்ற பாத்திரத்தில் நடித்தார். இவர் தனக்கு தானே பட்டப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்.அவர் இது குறித்து கூறியதாவது:பல குறும்படங்களில் நடித்தேன். படைவீரன் மூலம் அறிமுகமானேன், பிறகு காளி படத்தில் நடித்தேன். ஆனால் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தென்றல் பாத்திரம் என்னை ரசிகர்கள் மனதில் பதியவைத்தது.நடிப்பில் எனக்கு மிகுந்த ஆர்வம். ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சில குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்தேன்.

நான் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன், என் வேலையை விட்டு வெளியேற விரும்பவில்லை. எனவே, விளம்பரங்களுக்காகவும், குறும்படங்களுக்காகவும் சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் பறந்து கொண்டிருந்தேன். பின்னர் படை வீரன் படத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், என் வேலையை விட்டு விட்டு சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்தேன்.எனது பயணம் கடினமாக இருந்தது, ஆனால் நான் அந்த வழியில் செல்ல முடிவு செய்தேன். ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பாத்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிறையக் குறும்படங்கள் மற்றும் சிறிய வேடங்களில் நடித்தேன். நான் வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன், இறுதியில் கிடைத்தது. பிகில் படத்தில் நடிக்க என்னிடம் அட்லீ கேட்ட போது ஆசீர்வாதம் போல் உணர்ந்தேன். ஷூட்டிங்கில் விஜய் சார் பொறுமை எங்கள் எல்லோரிடம், நன்றாகவே பழகினார். எங்கள் பாத்திரங்கள் முக்கியம் வாய்ந்தது எல்லோரும் பிரகாசிப்பீர்கள் என்று அட்லீ சொன்னது உண்மையாகிவிட்டது.

பிகில் படத்தில் தென்றல் என்ற பாத்திரத்தில் நடித்தேன் தற்போது எனது இன்ஸ்டாகிராமில் அம்ரிதா-தென்றல் எனச் சேர்த்திருக்கிறேன். மக்கள் என்னைத் தென்றலாக அங்கீகரிக்கிறார்கள். நானும் அதையே அங்கீகரித்து விட்டேன். அவர்களில் பலருக்கு எனது உண்மையான பெயர் தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. தென்றல் என்றால் தான் தெரியும். தென்றல் அம்ரிதா என்றே அழைக்கிறார்கள்.அடுத்து கவின் படத்தில் நடிக்கிறேன். சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் நடந்தது. அது எனக்குத் தெரியாது. எனது வேடத்துக்கு வேறொருவர் டப்பிங் பேசு இருக்கிறார். இது ஏமாற்றமாக உள்ளது. ஏனென்றால் எனக்குத் தமிழ் சரளமாகப் பேச வரும்.இவ்வாறு தென்றல் அம்ரிதா கூறினார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை