2 நடிகைகள் சிறையில் தினமும் ஓவர் சண்டை.

Actress Ragini, Sanjana Fight in Jail

by Chandru, Oct 12, 2020, 13:21 PM IST

போதை மருந்து விவகாரம் தொடர்பாக பெங்களுருவில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 1 மாதத்துக்கு முன் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியான விசாரணையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பெங்களூரு அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராகினி, சஞ்சனா இருவரும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர் ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. இருவரும் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டனர், ராகினி புத்தகம் படிப்பதால் இரவிலும் விளக்கை அதிக நேரம் எரியவிடுகிறாராம். இது சஞ்சனாவின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக சொல்லி விளக்கை அணைக்க கேட்கிறார். ஆனால் ராகினி அதற்கு மறுக்கிறார். இதனால் அடிக்கடி இருவருக் கம் சண்டை நடக்கிறது. கடந்த மாதம் மோதிக் கொண்டபோது பெண் போலீசார் வந்து சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இது உயர் அதிகாரிகள் வரை புகார் ஆனது. இதையடுத்து வேறு வேறு அறைகளில் இருவரையும் அடைக்க சிறை உயர் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி சஞ்சனா திருட்டு வழக்கில் கைதான பெண் கைதி அறையிலும், நடிகை ராகினி கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி கைதாகி உள்ள பெண்ணின் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் சஞ்சனா, ராகினி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அமலாக்க துறையின் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை