விளக்கு ஏற்றி பிறந்தநாள் கொண்டாடிய படக்குழு.. இது தமிழ் பாரம்பரியம்..

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.திரையுலக ஜம்பாவனாக விளங்கும் B.லெனின் அவர்கள் கதை,திரைக்கதை,வசனத்தை எழுதியிருப்பதுடன் இப்படத்தின் படத்தொகுப்பையும் மேற்கொள்கிறார்.சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்திரன் மருமகள் கீதா கைலாசம், தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழேந்தி இன்று கட்டில் படக்குழுவினருடன் பிறந்த நாளை கொண்டாடினார். இவர் இப்படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகனான இ.வி.கணேஷ்பாபு அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெற்றார் தமிழேந்தி. பின்பு இன்றைய நாகரிகத்தின் படி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் பாடலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பாட, உடன் இப்படத்தில் நடித்திருக்கும் இ.வி.கணேஷ்பாபு, சிருஷ்டிடாங்கே, எடிட்டர் B.லெனின், கீதா கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்தியக் கலாச்சாரத்தின் பல்வேறு அடையாளங்களையும் தமிழ் பாரம்பரியத்தையும் கட்டில் திரைப்படம் வெளிப்படுத்துவதோடு மட்டுமன்றி தன் மகன் பிறந்த நாளையும் தமிழ் பாரம்பரிய முறைப்படி விளக்கு ஏற்றி கட்டில் படக்குழுவோடு கொண்டாடியது என்றும் மறக்கமுடியாத நிகழ்வாகும். அதுவும் இன்று கட்டில் படப்பிடிப்பின் நிறைவு நாளில் அனைத்து முக்கிய கட்டில் படக்குழுவினரும் கலந்துக்கொண்டது தனிச் சிறப்பு என்று இப்படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.

வைட்ஆங்கிள் ரவிசங்கரன் கட்டில் படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார். "மெட்டிஒலி" சாந்தி நடனம் அமைத்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds