பிரபல ஹீரோ படத்துக்கு இயக்குனர் மாற்றம்.. ஜோதிகா பட இயக்குனர் ஒப்பந்தம்..

Advertisement

சில வேற்று மொழி படங்களை பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில் செய்வார்கள் என்ற ஆர்வம் எழும். ஏனென்றால் அந்தளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் தாக்கம் நம்மைப் பாதித்திருக்கும். அப்படியொரு படம் தான் 'அந்தாதூன்'. அனைத்து மொழிகளிலும் ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய த்ரில்லராக அமைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது மட்டுமன்றி சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை எனத் தேசிய விருதுகளையும் வென்றது. இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கினை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் தியாக ராஜன். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடலிழைத்து முழுமையாக மாறியுள்ளார் பிரசாந்த். இந்தப் படத்தை 'பொன்மகள் வந்தாள்' படத்தின் மூலம் முத்திரை பதித்த ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். முன்னதாக இந்தப் படம் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது.

இதன் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தபு கதாபாத்திரத்துக்கு மிகப்பிரபலமான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்தும் ஒப்பந்தமாக முடிவானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார் தியாகராஜன். டிசம்பர் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காகப் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, நடிகர்கள் - தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் என அனைத்து பணிகளையும் மும்முரமாகக் கவனித்து வருகிறார் ஜே.ஜே.பிரட்ரிக்.

இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'அந்தாதூன்' இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கும் அதே போன்றதொரு வரவேற்பைப் பெற வேண்டும் என்று அனைத்து வழிகளிலும் படக்குழு பணியாற்றி வருகிறது. ரசிகர்களுக்கு காமெடியான ஒரு த்ரில்லர் படம் 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>