சிறையில் நடிகை திடீர் கதறல்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

by Chandru, Oct 17, 2020, 12:53 PM IST

பெங்களூரூவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக டிவி நடிகை அனிகா செய்யப்பட்டார். அவர்களிடம் போதை மருந்து குற்றப் பிரிவு தடுப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்ஜனா கல்ராணி இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி பரப்பனா அக்ரஹாராவில் உள்ள மத்தியச் சிறையில் நீதித் துறை காவலில் உள்ளனர், அங்கு அவர்கள் ஜாமீனில் வெளியே வர காத்திருக்கிறார்கள். இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி மோதல் எழுந்தது. இதையடுத்து இருவரும் சக சிறைக் கைதிகள் அறையில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.

ராகினி தனக்கு முதுகு வலி இருப்பதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கும்படியும் அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராகினி, சிறைச்சாலையில் தூங்குவதற்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததால் முதுகு வலி இருப்பதாகச் சிறை அதிகாரிகளிடம் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அவர் ஆரம்பத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரியிருந்தார், ஆனால் இறுதியில் பரப்பனா அக்ரஹாராவில் அமைந்துள்ள சிறை மருத்துவ மனையிலிருந்து அவருக்குச் சிகிச்சை பெறும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென்று ராகினி இரவில் சிறையில் அலறியதால் கைதிகளும் போலீஸாரும் ஷாக் ஆகினார். முதுகு வலி தங்கமுடியவில்லை என்று ராகினி கூறியதையடுத்து சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் நான்கு பெண் மருத்துவர்களைக் கொண்ட குழு அவருக்குச் சிகிச்சை அளித்தது. சிகிச்சைக்குப் பிறகு அவர் குணம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீதிமன்றக் காவலில் இருக்கும் ராகினி, இறுதியாக ஜாமீனுக்காக உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி நடிகையின் வீட்டில் நான்கு மணி நேரம் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார், பின்னர் சிசிபி அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை