அசையும் போஸ்டர் வெளியிட்டு ட்ரீட் தரும் ஹீரோ.. பிறந்த நாளுக்கு நடிகரின் பரிசு..

by Chandru, Oct 17, 2020, 15:17 PM IST

பிரபல நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்குப் பிறகு அடுத்த பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறார். பாகுபலிக்கு பிறகு அவர் நடிப்பில் சஹோ படம் வெளியானது. இதில் பாலிவுட் நடிகை ஷிரத்தா கபூர் ஹீரோயினாக நடித்தார். இப்படம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை. இதில் அப்செட் ஆன பிரபாஸ் பெரிய வெற்றிப் படமாக ஒன்றுக்குப் பதில் இரண்டு படமாகத் தர திட்டமிட்டு நடித்து வருகிறார். அதில் நடித்து வரும் ராதே ஷ்யாம் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.ஏற்கனவே கடந்த ஜுலை மாதம் 10ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதற்கு வரவேற்பு கிடைத்தது. வரும் 23ம் தேதி பிரபாஸ் பிறந்த தினம். அந்நாளில் தனது ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் வகையில் ராதே ஷ்யாம் படத்தின் நகரும் போஸ்டர் அதாவது மோஷன் போஸ்டர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார் பிரபாஸ்.

இதுபற்றி அறிவிப்பை, வானை தொடும் அளவுக்கு புகை கக்கியபடி சீறிவரும் ஒரு ரயில் படத்தை வெளியிட்டு,ராதே ஷ்யாம் படத்தின் அதிர்வை உணரும் வகையில் அக்டோபர் 23ம் தேதி மோஷன் போஸ்டர் வெளியாகிறது. காத்திருங்கள் எனத் தெரிவித்து ரசிகர்களை உசுப்பேற்றி விட்டிருக்கிறார்.பிரபாஸ் நடிக்கும் மற்றொரு பிரமாண்ட படமாக ஆதிபுருஷ் உருவாகிறது. இதில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News