கவர்ச்சியை விமர்சித்தவரை கப் சிப் ஆக்கிய நடிகை ..

by Chandru, Oct 17, 2020, 17:13 PM IST

நடிகை அமலாபால் கொரோனா ஊரடங்கில் சமூகவலை தளத்தில் பிஸியாக இருக்கிறார். அத்துடன் சக நண்பர்களுடன் பீச்சுக்குச் சென்று ஒடி விளையாடி பொழுதைக் கழிக்கிறார். அத்துடன் தனது கவர்ச்சி படங்களை நெட்டில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அமலா பால் கடைசியாக ஆடை படத்தில் நடித்தார். ரத்னகுமார் இயக்கினார். அடுத்த அவர் நடித்துள்ள அதோ அந்த பறவை போல ரிலீசுக்கு காத்திருக்கிறது. கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். காடெவர் என்ற படத்திலும் நடிக்கிறார். இதனைப் புதுமுக இயக்குனர் அபிலாஷ் பிள்ளை இயக்குகிறார்.

அமலாபால் தனது சமூகவலை தள பக்கத்தில் தனது புதிய போட்டோ ஷூட் ஸ்டில்லை வெளியிட்டார். அதில் பச்சை நிற ஆடை, வெளிர்பச்சை நிற மணிகள் என்று அணிந்து ஓவியம்போல் இருந்தார். டாப் ஆங்களில் புகைப்படம் ஒன்று கவர்ச்சியை அள்ளி வீசியது. அதைக் கண்ட ஒரு நெட்டிஸன் அமலாவின் உடல் தோற்றம் மற்றும் மார்பகம் பற்றிக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். அதைக் கண்டு கோபம் அடைந்த அமலாபால், நெட்டிசனுக்கு "என்ன மார்பகங்கள்?! ?? 2020 ப்ரூஹோ ! என்று சொல்லி அந்த நெட்டிசனை கப்சிப் ஆக்கினார்.அமலாபாலின் துணிச்சலான பதிலடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News