தல படத்துக்கு டெல்லியில் பர்மிஷன் இல்லை..

No Permission granted for Valimai to Shoot in Delhi

by Chandru, Oct 20, 2020, 10:17 AM IST

தல அஜீத்குமார் விஸ்வாசம் படத்துக்குப் பிறகு எச். வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து வலிமை படத்தில் நடிக்கிறார். இதனையும் எச்.வினோத் டைரக்ட் செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு ஐதராபாத்தில் நடந்தது. ஊரடங்கு அமலானதும் படப்பிடிப்பு தடைப்பட்டது. 6 மாதம் கடந்தும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி நடத்த அரசு அனுமதி கொடுத்து ஒரு மாதம் ஆன நிலையில் பல படங்களின் ஷூட்டிங் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்தி வருகின்றன.

வலிமை படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டனர். முன்னதாக வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்த எண்ணியிருந்தனர். கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தற்போது அக்காட்சிகளை இந்தியாவில் பல்வேறு இடங்களில் படமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் படப்பிடிப்பை நடத்த எண்ணி இதுவரை அங்குப் படமாக்கப் படாத லொகேஷன்களில் ஷுட்டிங் நடத்த எண்ணி அதற்கான அனுமதி அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால் அந்த இடங்களில் அனுமதி தர அரசு மறுத்துவிட்டது. தற்போது மீண்டும் வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த லொகேஷன் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வலிமை மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை