“அந்த வார்த்தையை சொல்ல அவருக்கு எந்த தகுதியும் இல்லை”.. வனிதாவிடம் வீணாக சண்டை பிடிக்கும் பீக் பாஸ் நடிகை..

Bigboss kasthuri retwetted to vanitha vijayakumar

by Logeswari, Oct 21, 2020, 09:38 AM IST

வனிதா என்ற பெயர் கேட்டாலே ஏதோ ஒரு பிரச்சனை என்று தான் சிந்திக்க தோன்றும்.. அப்படிபட்ட சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் நம் வனிதா அக்கா. மிகுந்த சர்ச்சைக்கு பிறகு பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் வனிதாவின் மேல் யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இருவரும் சண்டை போட்டு தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பீட்டர் பாலை பிரிந்ததர்க்கு காரணத்தையும் கஷ்டத்தையும் சொல்லி மிகவும் வருந்தினார். இதற்கு பிக் பாஸ் நடிகையான கஸ்தூரி உங்கள் சொந்த கதை மற்றவருக்கு தெரிய கூடாது என்று நினைத்தால் எதுக்கு நீங்களே தினமும் மீடியாவுக்கு ஒரு அப்டேட் தருகிறீர்கள் என்று திட்டவட்டமாக கேட்டார்.

இனிமேல் வனிதா ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு என்று தன்னைத்தானே சொல்லிக் கொண்டால் அவ்வளவு தான்.. நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது என்று பயங்கரமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பீட்டர் பிரச்சனை ஆரம்பம் ஆகும் போதே வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் முட்டி கொண்டது. வனிதாவும் கஸ்தூரியை சும்மா விடல அவரும் களம் இறங்கி கஸ்தூரியுடன் மல்லு கட்டினார். பிறகு ஒரளவு சண்டை முடிந்த நிலையில் மறுபடியும் கஸ்தூரி வீணாக கொளுத்தி போட்டு வம்பு இழுக்கும் விதமாக காரசாரமாக பேசியுள்ளார்.

இதற்கு வனிதா என்ன சொல்ல போகிறார் என்று மக்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். வனிதாவின் கதை ஒரு சிறிய பிக் பாஸ் போல் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது..

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை