பிரபல நடிகர் ரகசிய திருமணம்.. கோலிவுட்டில் பரபரப்பு

RK.Suresh weds Financier Madhu

by Chandru, Oct 21, 2020, 13:46 PM IST

பிரபல நடிகைகள் சிலர் தங்களது பட வாய்ப்புகள் பறிபோகமலிருக்க ரகசிய திருமணம் செய்வது அவ்வப்போது நடக்கிறது. ஆனால் பிரபல நடிகர் ஒருவர் ரகசிய திருமணம் செய்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தல தளபதி, மருது. தர்மதுரை. ஹர ஹர மஹாதேவகி, இப்படை வெல்லும், மதுர ராஜா, நம்மவீட்டு பிள்ளை என பல படங்களில் வில்லன், ஹீரோ, குணசித்ரம் என பலவித கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே. சுரேஷ். இவர் தம்பிகோட்டை, சலீம், தர்மதுரை, அட்டு போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். தவிர பல படங்கள் விநியோகித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷுக்கு சில தினங்களுக்கு முன் சென்னை சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் மிகவும் ரகசியமாக நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருமணத்தில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. நடிகர் ஒருவர் ரகசிய திருமணம் செய்துகொண்டது கோலிவுட்டில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. இதுபற்றி தகவல் வெளியானது, அவருக்கு திரையுலகினர் பலர் செல்போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண போட்டோவை பகிர்ந்திருக்கும் ஆர்.கே. சுரேஷ்,என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை தாருங்கள் ( Request everyone to please respect my privacy!) என தெரிவித்திருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை