பிறந்த நாளுக்கு முன்பே பாகுபலி நடிகரின் ரசிகர்களுக்கு அட்வான்ஸ் விருந்து..

Advertisement

பிரபல நடிகர், நடிகைகளின் பிறந்தநாளன்று அவர்களது ரசிகர்களையும், ஏன்? அந்தந்த நடிகர், நடிகையையும் குளிர வைக்க அவர்கள் நடிக்கும் படங்களிலிருந்து அவர்களது ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடுவது பேஷனாகி வருகிறது. ராதே ஷ்யாம் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பூஜா ஹெக்டே பிறந்தநாளான கடந்த அக். 13 அன்று, பட தயாரிப்பாளர்கள் அவரது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட் டனர். அடுத்து பட ஹீரோ பிரபாஸ் பிறந்த நாள் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று கொண்டாட உள்ளார். அவருக்கு ஸ்பெஷல் கவனிப்பை தயாரிப்பாளர்கள் மேற் கொண்டுள்ளனர். அதாவது அவரது பிறந்த நாளுக்கு 2 தினங்களுக்கு முன்பே ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் முகத்தில் புன்னகையை கொண்டுவரும் நோக்கில் அட்வான்ஸ் பிறந்தநாள் விருந்தாக, ராதே ஷ்யாம் திரைப்படத்தில் தயாரிப்பாளர்களான யுவி கிரியேஷன்ஸ் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி விக்ரமாதித்யா என்னும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்த போஸ்டர் படத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளது.

“CAPTION AND LINK” எனப்படும் போஸ்டர் மற்றும் பிரபாஸ் லுக் இரண்டையும் பட தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். தங்கள் ஆஸ்தான நடிகரின் பிறந்தநாளை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், இந்த போஸ்டர் நிச்சயமாக பிரபாஸுக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர்கள் கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸின் விக்ரமாதித்யா லுக்கை ராதே ஷ்யாம் தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர். அதேவேளையில், படக்குழுவினர் தற்போது இத்தாலி நாட்டின் டோரினாவின் அழகிய மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். வடக்கு இத்தாலியில் அமைந்துள்ள டோரினா நகரத்தில் அழகிய ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ளது. இந்த நகரம் சில பிரபலமான அடையாளங்களால் அறியப்படுகிறது.

இந்த இடங்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்கவர் திரைப்படமாக்குவது மட்டுமின்றி கதையின் தரத்தை உயர்த்துகிறது. பிரம்மாண்ட படைப்பான 'ராதேஷ்யாம் திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்பட த்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. UV கிரியேஷன்ஸ் சார்பில் பிரமோத் வம்சி தயாரிப்பில்ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் ரொமாண்டிக் பீரியட் படமாக உருவாகும் இந்த பன்மொழி திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>