கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை சொன்ன வாழ்த்து.. திருமண நடிகைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..

Tamanna Send wishes to Kajal Agarwal

by Chandru, Oct 22, 2020, 17:00 PM IST

நடிகை தமன்னா சமீபத்தில் படப்பிடிப்பில் பங்கேற்க ஹைதராபாத்திற்குச் சென்றார். அங்குப் படப்பிடிப்பின் போது நடந்த கொரோனா வைரஸ் சோதனையில் நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார்.2 வாரச் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்து மும்பையில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார்.

தற்போது தமன்னா தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார். வழக்கமான உடற்பயிற்சி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமன்னா தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார். அவர்களில் ஒரு ரசிகர், நடிகை காஜல் அகர்வாலுடனான நட்பு குறித்துக் கேட்டார், அவர் தமன்னாவுடன் ஒரு சிறந்த உறவைப் பகிர்ந்து கொள்கிறார்.

அதற்கு தமன்னா பதிலளித்தார், "நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், மனம் விட்டு ஆழ்ந்த உரையாடல்களை மேற்கொண்டிருக்கிறோம். காஜல் அகர்வாலை சந்திப்பது எப்போதுமே ஜாலியான ஒரு உணர்வைத் தரும். நான் அவருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய விரும்புகிறேன். அவருக்கு என் மனம் நிறைந்த அன்புடன் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன், காஜு".தமன்னா சொன்ன திருமண வாழ்த்தை அறிந்து காஜல் மகிழ்ச்சி தெரிவித்து அவருக்கு நன்றி கூறினார். ஏற்கனவே நடிகை சமந்தா உள்ளிட்டவர்கள் காஜலுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் பகிர்ந்திருந்தனர். காஜல் திருமணம் இம்மாதம் 30ம் தேதி மும்பையில் நடக்கிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை