பிரபல நட்சத்திர ஜோடிக்கு கொரோனா பாதிப்பு? நடிகர் கவலைக்கிடமா?

Veteran actor couple have been tested positive for Corona

by Chandru, Oct 23, 2020, 11:56 AM IST

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் குறையவில்லை. இன்னமும் கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை தினம் தினம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் அதிகரித்தாலும் மறுபக்கம் சிகிச்சை பெற்றுக் குணமாகிறவர்கள் எண்ணிக்கையும் நடந்து வருகிறது.

பிரபல நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி. இயக்குனர் ராஜ மவுலி எனப் பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். சமீபத்தில் நடிகை தமன்னா கொரோனா பாதித்து சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார்.

இந்நிலையில் நட்சத்திர தம்பதிகள் நடிகர் டக்டர் ராஜசேகர், அவரது மனைவி நடிகை ஜீவிதா இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாகத் தகவல் பரவியதுடன் ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் பரவியது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து அவருக்குப் பலரும் தொலைப்பேசியில் நலம் விசாரித்தனர். ஆனால் தங்களுக்கு கொரோனா பாதிப்பு எதும் இல்லை, நன்றாக இருக்கிறோம், குறிப்பாக ராஜசேகர் உடல்நலனில் பாதிப்பு எதுவும் இல்லை அவரது உடல் நலம் நன்றாக இருப்பதாக ஜீவிதாவும் அவரது மகளும் விளக்கம் அளித்துள்ளனர்.

ராஜசேகர் தமிழில் இதுதான்டா போலீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஜீவிதா தமிழில் வளைகாப்பு, தப்பு கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு. ராஜ மரியாதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ராஜசேகர்- ஜீவிதா தம்பதிக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என 2 மகள்கள் உள்ளனர்.ஷிவானி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை