ரயிலில் தொங்கியபடி பிரபல ஜோடி காதல்.. ஹீரோ ஸ்பெஷல் வீடியோ..

Advertisement

பிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு இன்று பிறந்த தினம். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தற்போது ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் டைரக்டு செய்கிறார். பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபாஸ் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்திலிருந்து அசத்தலான ஸ்பெஷல் மோஷன் வீடியோவை வெளியிட்ட படக்குழு பிரபாஸுக்கு வாழ்த்து பகிர்ந்துள்ளது. ராதே ஷ்யாம் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

படத்தில் பிரபாஸின் புத்துணர்வு தரும் தோற்றம் ரசிகர்களை சுண்டி இழுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. ஏற்கெனவே ரசிகர்கள் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த நிலையில், இன்று பிரபாஸின் பிறந்தநாள் என்பதால் அதை மேலும் இனிமையானதாக்கும் வகையில் படக்குழு படத்தின் மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது. அழகியல் ததும்பும் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ரயில் பாதையில் சீறிப்பாயும் ரயிலை காட்சிப்படுத்தி அந்த மோஷன் வீடியோ தொடங்குகிறது. அப்படியே விரியும் காட்சிகள் அந்த ரயிலின் வெவ்வேறு பெட்டியில் பயணிக்கும் விக்ரமாதித்யா, பிரேரனாவின் மீது படர்கிறது. இருவரும் வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். விக்ரமாதித்யா (பிரபாஸ்), பிரேரனாவின் (பூஜா ஹெக்டே) அறிமுகக்காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், ராதே ஷ்யாம், ஐரோப்பாவில் நடைபெறும் ஒரு மகத்தான காதல் காவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது. படத்தை ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார். வம்சி மற்றும் பிரமோத் யுவி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கின்றனர். வம்ஸி மற்றும் பிரமோத் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்கிறார். கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் எடிட்டிங் செய்கிறார். நிக் போவெல் சண்டைக் காட்சிகள் அமைக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார். வைபவி மெர்ச்சன்ட் நடனம் அமைக்கிறார்.

வீடியோ லின்க்:

https://youtu.be/Ffp2i537Fiw

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>