தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு பிரபல இயக்குனர் போட்டி..

Advertisement

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரும் நவம்பர் 22ம் தேதி புதிய நிர்வாகிகளுக்கான போட்டி நடக்கிறது. 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக டி.ராஜேந்தர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மற்ற நிர்வாகிகள் பதவிக்கும் அவரது அணி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்து விட்டு டி.ராஜேந்தர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
2020-22ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் சத்தியத்தை தர்மத்தை நியாயத்தை உண்மையை நெஞ்சுரத்தை நிலைநாட்ட இன்று காலை இறைவன் அருளால் என்னுடைய வேட்புமனு என் சார்பாகவும் என்னுடைய அணியின் சார்பாகவும் தாக்கல் செய்தேன். இந்த தலைவர் பதவிக்கு பொருத்தமானவரை நெஞ்சுரத்தோடு இருக்கும் ஒருவரை, சட்டத்தோடும் எந்த கருத்தையும் எடுத்துச் சொல்லும் ஒருவர் வேண்டும் என என்னை மன்னன் தலைவ பதவிக்கு போட்டியிட முன்மொழிந்தார். இந்த சங்கம் ஒன்றாக இருக்க வேண்டும் அதற்கு நல்ல மனம் படைத்தவர்கள் அத்தனை பேரும் வலியுறுத்தியாதால்தான் தயக்கங்களை எல்லாம் மீறி சங்கத்தை மூடி வைக்கக்கூடாது என்பதற்காக நான் தலைவர் பதவிக்கு போட்டியிட சம்மத்திதேன்.

மன்னன் செயலாளர் பதவிக்கும் அதைபோல் சந்திரபோஸ் இன்னொரு செயலாளர் பதவிக்கும் பொருளாளர் பதவிக்கு மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன், துணைத்தலைவர் பதவிக்கு முருகன், பிடி செல்வகுமார், மற்றும் அணியின் சார்பில் செயற்குழுவில் ஆர்வி உதயகுமார், மனோபாலா ஷக்தி சிதம்பரம், மனோஜ் குமார், சரவணன், கே,ஜி பாண்டியன், செல்வம், திருமலை, வை. ராஜா, ஷியாம், ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் செயற்குழுவிற்கு போடியிடுகின்றனர். சங்கத்துக்கு நிதி பற்றாகுறை இருக்கிறது, சங்கம் கோமா ஸ்டேஜில் இருக்கிறது என்றார்கள். கோமா ஸ்டேஜ் மாற்றி டிராமா ஸ்டேஜ் மாற்றி சங்கத்தை சினிமா ஸ்டேஜாக்கி விடுவோம். சங்கத்தை தூக்கி நிறுத்துவோம் என்ற முடிவோடுதான் என்ற உதவிக்கரம் நீட்டும் எண்ணத்துடன் போட்டியிடுகிறேன். சிலர் சங்கத்திலிருந்து உடைத்துக்கொண்டு போய் விட்டார்கள். அதற்காக இது கிடப்பு சங்கமாகிப் போய் விடக்கூடாது. இது துடிப்பு சங்கமாக, கொள்கை பிடிப்பு சங்கமாக் இருக்க வேண்டும் என்று நாங்கள் வந்திருக்கிறோம். இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>