சூர்யா படம் ஒடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம், தியேட்டரில் வெளியாகுமா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..

Suraraippottru May Release On Cinema Theatre in Dewali?

by Chandru, Oct 23, 2020, 13:20 PM IST

சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்கவில்லை. இதற்கிடையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் வேகமாக நடந்தன. சூர்யா, டைரக்டர் சுதா கொங்கரா உள்ளிட்டவர்கள் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேட்டி அளித்தனர். படப்பிடிப்பில் பணியாற்றிய ஒர்க்கிங் வீடியோக்களும் வெளியிடப்பட்டது.

சூரரைப்போற்று படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சில எதிர்பாராத பிரச்சனைகளால் பட ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார். 'சூரரைப் போற்று 'எப்போது வெளியாகும் எனச் சூரியா இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் அல்ல. சில நேரம் எனது சூழல் இதற்கு முன் சந்தித்திராத வகையில் அமையும்.

இப்போது நான் மனந்திறந்த நிலையில் வெளிப்படையாக உங்கள் முன் நிற்கிறேன். பேச விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிற்க வைத்திருக்கிறீர்கள் எல்லா வகையிலும்.உங்களது பிரதிபலன் பாராத அன்பும் பாராட்டும் உண்மையும் தான் இந்த தகுதியை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறது.'சூரரைப்போற்று' படம் தொடங்கிய போதே இது ஒரு சவாலான முயற்சி என்று அதை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியாக நாங்கள் உணர்ந்தோம். இதற்கான படப்பிடிப்பு தளங்கள் இதுவரை காணாதவை. பணிபுரிந்த புதிய புதிய படப்பிடிப்பு இடங்கள், சந்தித்த மனிதர்கள், சந்தித்த வெவ்வேறு மொழியினர், பணியாற்றிய திறமைசாலிகள் என அனைத்தும் மறக்க முடியாதவை. அவை வித்தியாசமானவை மட்டுமல்ல குறிப்பிடத்தக்கதாகவும் இருந்தவை.

'மாறா' என்ற அந்த உலகத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக இருந்த அந்த பிரம்மாண்ட அனுபவத் தை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது. படத்தில் விமானப்படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அது சம்பந்தமாக ஏராளமான நடைமுறைகளும் அனுமதிகளும் பெறவேண்டியிருந்தது. இப்படம் தேசியப் பாதுகாப்பு பற்றிப் பேசுவதால் அது சம்பந்தமாக இந்திய விமானப்படையுடன் நாங்கள் தொடர்புகொண்டு அணுகி அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டி இருந்தது.படம் வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது.இது வழக்கமான நடைமுறை தான்
வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம்.

'சூரரைப் போற்று ' படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த கதை இது. துரதிருஷ்டவசமாகச் சிறு தாமதம் ஆகிறது. படம் தாமதம் என்பது எனக்கும் சிறு வலி ஏற்படுத்திடும் விஷயம் தான் .ஏனென்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த தாமதம் எதிர்பார்ப்பைக் கூட்டும் ஒரு அம்சமாக நாம் நேர்நிலையாக எடுத்துக் கொள்வோம்.இந்த சின்ன இடைவெளியை மாறாவின் உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க ஒரு முன்தயாரிப்பு நேரமாக எடுத்துக்கொள்ளலாம். இப்படி பாசிட்டிவாக எடுத்துக் கொள்வோம் .விரைவில் ஒரு சிறப்பு முன்னோட்டத்தை வெளியிட இருக்கிறோம் .இத்துடன் ஒரு அழகான நட்பைப் பற்றிய பாடலை வெளியிடுகிறோம். அது நம் நட்புக்கான அர்ப்பணிப்பாகவும் அன்பின் அடையாளமாகவும் இருக்கும்.இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

ஒடிடியில் படங்கள் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் தியேட்டரில் படங்களை வெளியிடும் உரிமை தயாரிப்பாளரிடமே இருக்கிறது. சமீபத்தில் தியேட்டர் அதிபர்கள் தமிழக முதல்வரை சந்தித்து தியேட்டர்கள் திறக்க அனுமதி கோரிய நிலையில் விரைவில் அதாவது தீபாவளிக்கு முன்பே சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதால் சூரரைப் போற்று தீபாவளி விருந்தாக தியேட்டரில் வெளியாகும் வாய்ப்பும் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You'r reading சூர்யா படம் ஒடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம், தியேட்டரில் வெளியாகுமா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை