பிரபல காமெடி நடிகர் பற்றிய யூடியூப் வதந்தியால் பரபரப்பு.. போலீஸ் கமிஷனரிடம் புகார்.

Rumours against goundamani on youtube :Police complaint

by Chandru, Oct 23, 2020, 17:04 PM IST

பிரபல நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோவாகவும், குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் கவுண்டமணி. இவரைப்பற்றி இணைய தள யூடியூபில் வதந்தி பரவியது. இதையறிந்து கவுண்டமணி ஷாக் ஆனார். இதுகுறித்து அவரது மேனேஜர் விஜய முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:யூடியூப்பில் நடிகர் கவுண்ட மணியைப் பற்றி வதந்தியைக் கிளப்பி உள்ளனர். அது உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் இது போல் தவறான செய்தியைப் பரப்பும் அந்த நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று கவுண்டமணி கூறியுள்ளார்.

யூடியூப்பில் உள்ள கவுண்ட மணி பற்றிய தவறான தகவலை அவர்களே உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு விஜய முரளி கூறி உள்ளார்.மேலும் கவுண்டமணி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன் இதேபோல் கவுண்டமணி பற்றி வதந்தி பரவியது.அப்போதும் போலீஸ் புகார் கொடுத்த பிறகு வதந்தி பரப்பியவர்கள் அமைதியானார். கடந்த ஆண்டு பாடகி எஸ்.ஜானகி பற்றியும் வதந்தி பரப்பினார்கள். அப்போது ஜானகியே நேரில் வீடியோவில் பேசி அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை