பிக்பாஸில் அர்ச்சனாவை குறிவைக்கும் பாலாஜி.. அடுத்த வாரம் நா வெளியே போறேன்..

Archana,Balaji clash in Bigboss 4

by Chandru, Oct 24, 2020, 16:27 PM IST

பிக்பாஸ் போட்டியில் 1 முதல் 16 வரையிலான நம்பர் விளையாட்டு நடக்கிறது 1வது இடத்தில் இருப்பவர் வெற்றிக்கான நபராக இருப்பார். 16வது இடத்தில் இருப்பவர் அடுத்த வார எவிக்ஷனுக்கானவராக இருப்பார். போட்டியாளர்கள் ஓட்டுப் போட்டு யாருக்கு எந்த இடம் என்று ஒதுக்குகிறார்கள்.

ஆரம்பத்தில் ஆட்டம் போட்ட மொட்டை சுரேஷ் தற்போது ஒவ்வொருவரிடமும் மூக்குடைந்து பெட்டிபாம்பாகிவிட்டதுடன் அடுத்த வாரம் வெளியே போறதுக்கு நான் ரெடி என்று அவரே 16வது இடத்துக்குப் போய் விட்டார். அர்ச்சனாவுக்கு 11 ஓட்டுப் போட்டு அவரை 11வது இடத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள்.

அதற்கு பாலாஜி காரணம் சொல்கிறார் இரண்டு பேரிடம் இரண்டு விதமாகப் பேசுகிறார் அர்ச்சனா. அவரது பேச்சில் நேர்மை இல்லை எனக் காரணம் சொல்கிறார். அவர் 11வது இடத்துக்கு அனுப்பப்பட்டதற்கு இதுதான் காரணம் என்கிறார் பாலாஜி. இது அர்ச்சனாவை அப்செட் ஆக்குகிறது. மற்ற இடங்களுக்கு யாரெல்லாம் போகப் போகிறார்கள் என்பது இன்று இரவு தெரியும். போட்டியாளர்கள் வெளியில் சென்றாலும் அவர்களுக்குப் பதிலாக வேறு புது போட்டியாளர்கள் எண்ட்ரி இருப்பதால் இன்னும் கலகலப்புக்கும் மோதலுக்கும் பஞ்சமிருக்காது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை