டெர்மினேட்டர் படத்தில் இரும்பு ரோபோ மனிதனாக நடித்து புகழ் பெற்றவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட இவருக்கும் உடலின் உள்ளுறுப்புகள் பிரச்னை தருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு சிராக மூச்சு விடுவதில் அவ்வபோது பிரச்னை ஏற்பட்டது. நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக அப்போது அவருக்கு முதல்முறையாக இதய அறுவை சிகிச்சை நடந்தப்பட்டது. அதில் குணம் அடைந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு 2வதுமுறையாக இதய அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே தெரிவித்திருக்கிறார். 73 வயதான அர்னால்டுக்கு இதயத்தில் ஒரு புதிய பெரு நாடி வால்வு பொருத்தப்பட்டதாக கூறினார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்து வருகிறார். இதுபற்றி கூறிய நடிகர், தனக்கு ஒரு புதிய பெருநாடி வால்வு பொருத்தப்பட்டது. இது இரண்டாவது இதய அறுவை சிகிச்சை. தற்போது நான் அருமையாக உணர்கிறேன், ஏற்கனவே கிளீவ்லேண்டின் தெருக்களில் உங்கள் அற்புதமான சிலைகளை அனுபவித்து வருகிறேன்.
கிளீவ்லேண்ட் கிளினிக்கில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவுக்கு நன்றி, எனது கடைசி அறுவை சிகிச்சையிலிருந்து எனது புதிய நுரையீரல் வால்வுடன் செல்ல ஒரு புதிய பெருநாடி வால்வு பொருத்தப்பட்டது என்ற ஸ்வார்ஸ்னேக்கர் கூறினார். மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி தனது கட்டை விரலைக் உயர்த்தி புகைபடத்துக்கு போஸ் கொடுத்து அதையும் பகிர்ந்தார் ஆர்னால்ட். 2018 ஆம் ஆண்டில், ஸ்வார்ஸ் னேக்கர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை செய்தார், இதுவொரு நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக நடந்தது. பிறவி இதயக் குறைபாடு காரணமாக இந்த வால்வு மாற்றப்பட்டது.
அர்னால்டின் மிக சமீபத்திய படமான டெர்மினேட்டர்: டார்க் ஃபேட், அவரது நீண்ட கால டெர்மினேட்டர் படத்தின் ஆறாவது பாகமாகும். லிண்டா ஹாமில்டனுடன் அவரை மீண்டும் இணைத்த இப்படம் 2019 அக்டோபரில் வெளியிடப்பட்டது.