"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி".. தமிழ் மொழி ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உயிர்நாடியாக செயல்பட்டு வருகின்றது. என்றும் தனித்து தலை தூக்கி வாழக்கூடிய மொழி நமது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. தமிழ் மொழியை பேசினாலே மனதில் எதோ ஓரு வித இனம்புரியாத உணர்ச்சி ஏற்படும்.. இப்படி தமிழை பற்றி நிறைய பேசி கொண்டே போகலாம்... தமிழ் மொழியை பற்றி நாம் பேசுவதை விட ஒரு ஸ்பெஷலான ஒருவர் பேசினால் தமிழின் தொன்மை அனைவருக்கும் புலப்படும்.
அந்த வகையில் நமது "தி சப்எடிட்டர்" அணியில் இருந்து நேர்காணலுக்காக கோவிந்த் கோபாலை சந்தித்து இருந்தனர்.இவரை பற்றி சொல்வதற்கு வெறும் வார்த்தைகள் போதாது. ஏனென்றால் தமிழ் மொழிக்காக தனது வாழ்க்கையே அர்ப்பணித்து கொண்டு கணக்கில்லாத தொண்டுகளை புரிந்துள்ளார். இதனால் இவரை தமிழ் மொழியின் வித்வானி என்றே கூறலாம். தமிழ் மொழியின் வாயிலாக மிகவும் கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துள்ளார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ் ஆசிரியர் கோவிந்த் கோபால் அவர்கள் 'சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா ஏரியா தமிழ் மன்றம்' நடத்தும் தேர்தலில் VP Cultural பதவிக்காக போட்டி போடுகிறார்.
இவர் ஆற்றிய தமிழ் தொண்டுகள்:-
தமிழ் பள்ளியில் 10 வருடம் ஆசிரியராக பணிபுரிந்து பல மாணவர்களின் எதிராக்காலத்திற்கு வழி காட்டுதலாக திகழ்ந்துள்ளார். வருடந்தோறும் விழிப்புணர்வு ஊட்டும் விதமாக விரிகுடா ஏரியாவில் குரல் கூடம் நடத்தும்போட்டியில் நடுவராக கலந்து கொண்டு திருக்குறளில் உள்ள கருத்துகளை அனைவருக்கும் எடுத்து கூறும் வல்லமை கொண்டவர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முகநூல் மற்றும் வாட்சப் வழியாக இணைத்து அவர்களின் தேவைகளான வேலை வாய்ப்பு, தமிழ் கருத்தரங்கம், பள்ளி, கல்லூரி என எல்லா வித தகவல்களையும் உடனுக்குடன் வழங்கி உள்ளார்.
சனிக்கிழமை தோறும் மக்கள் ஆரோக்கியமாக இருக்க யோகாவை இலவசமாக கற்று தருகிறார். திருமதி காமாட்சி அம்மா மூலம் திருக்குறள் இலவசமாக நடந்து வருகிறது.
ஓவிய ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், இசை கலைஞர்கள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர்களை, இங்குள்ள தமிழர்களிடம் அறிமுகப்படுத்தி நிறைய சேவைகளை செய்து வருகிறார். இப்பவே கோபால் அவர்கள் தனது தமிழை வளர்க்க வேண்டும் என்ற முயற்சியில் அதிக தமிழ் தொண்டுகளை நிகழ்த்தி வருகிறார்.
கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் அரசாங்கம் ஊரடங்கை பிறப்பித்தது. இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் வேலை இல்லாமல் அன்றாட வாழ்வை கூட வாழ முடியாமல் மிகவும் தவித்து வந்தனர். இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு நிதி திரட்டி நிகழ்ச்சி மூலம் மன்றத்துக்கு உதவி செய்துள்ளார்.
இந்நிலையில், இவர் VP Cultural தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழனுக்கு உதவும் வகையில் முக்கிய தேவையான வசதிகளை செய்து தருவேன் என்று வாக்கு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில்..
தமிழின் முத்தமிழாக விளங்கும் இயல், இசை, நாடகம் போன்றவற்றை நாடு முழுவதும் வளர எல்லா விதமான முயற்சியை எடுக்க அரும்பாடுபடுவேன். வருடம் தோறும் மக்களுக்கு உதவும் வகையில் வாழை இலையுடன் விருந்து வழங்கபடும்.
வளைகுடாப்பகுதிக்கு புதிதாக வரும் தமிழர்களுக்காக "New Comers Meetup" மாதம் தோறும் நடத்தி தமிழர்களை ஒன்றிணைப்போம். தமிழ்மன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் 24x7 சேவை வழங்கப்படும். அனைவருக்கும் வளைகுடாப்பகுதி மருத்துவர்கள் உதவியுடன் இலவச சித்த மருத்துவம் வசதி ஏற்படுத்த தரப்படும்.
இது போல பல வசதிகளை செய்து தருவதாக கோபால் அவர்கள் முழுமனதுடன் தெரிவித்துள்ளார். தமிழின் சேவை என் இரத்தத்தில் ஊறிப்போனதால் கடைசி மூச்சு உள்ள வரை தமிழுக்காக போராடுவேன் என்று மனதை உருக்கும் படி தெரிவித்துள்ளார்