விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் பிரபல டிவி நடிகை..

Actress Vani Bhojan Pair with Vikram Prabhu

by Chandru, Oct 25, 2020, 14:11 PM IST

தெய்வமகள், ஆஹா போன்ற டிவி சீரியலில் நடித்தவர் வாணி போஜன். பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஓர் இரவு, ஒ மை கடவுளே படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக பதிய படத்தில் நடிக்கிறார். அப்படத்துக்கு 'பாயும் ஒளி நீ எனக்கு' எனப் பெயரிடபட்டுள்ளது.

மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக் கொண்ட பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். நிர்வாக தயாரிப்பு பணியை ரமேஷ் நோக்கவல்லி மேற்கொள்கிறார்.

வரும் நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை