சமீபத்தில் நடிகை வனிதா டிவி டெக்னிஷியன் பீட்டர் பால் என்பவரை 2 மாதத்துக்கு முன் திருமணம் செய்தார். இது வனிதாவுக்கு 3வது திருமணம் பீட்டர் பாலுக்கு இரண்டாவது திருமணம். முதல்மனைவியின் சம்மதம் இல்லாமல் வனிதாவை பீட்டர் பால் மணந்தது சர்ச்சையானது.
பீட்டர் மீது முதல் மனைவி எலிசெபத் போலீஸில் புகார் அளித்தார். அவருக்கு ஆதரவாகவும் வனிதா, பீட்டர் பாலுக்கு எதிராகவும் நடிகைகள் லட்சுமி ராம கிருஷணன். கஸ்தூரி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர் அவர்களை அசிங்கமாக பேசி அவமானபடுத்தியதுடன் அவர்கள் மீது போலீசிலும் புகார் கொடுத்தார் வனிதா. என் வாழ்கையில் எந்த சம்பந்தமும் இல்லாமல் குறுக்கிடுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விவகாரம் கோர்ட் வரை சென்றது. பிறகு இரண்டு மாதம் இந்த பிரச்னை அமுங்கி இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பீட்டர் பால் மீது நடிகை வனிதா அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார். பீட்டர் பால் குடிகாரர் என்று அவர் முதல் மனைவி சொன்னது நிஜம்தான் நான் ஏமாந்துவிட்டேன் என தெரிவித்து அவரை வீட்டிலிருந்து வெளியேற்றினார்.
இந்நிலையில் வனிதா அரசியல் கட்சியில் சேர உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதே போல் வனிதாவும் பாரதி ஜனதா கட்சியில் சேர உள்ளதாக இணையதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து நடிகை வனிதா கூறியபோது, பா ஜ வில் இணைவது பற்றி நானே அறிவிப்பேன். அதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்திருக்கிறார். வனிதா திடீரென்று அரசியலில் குதிப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. பா ஜ கட்சியில் ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாரிடம், வனிதா பா ஜ கட்சியில் சேர்கிறாரா என்றதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.