போதைப்பொருள் கும்பல்களுடன் நெருக்கம் அதிகரிக்கிறது கஞ்சாவுடன் மேலும் ஒரு நடிகை கைது

TV actor preethika chauhan arrested by NCB while buying drugs

by Nishanth, Oct 26, 2020, 09:28 AM IST

மும்பையில் கஞ்சாவுடன் பிரபல நடிகை பிரீதிகா சவுகான் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போதைப் பொருள் கும்பல்களுடன் திரையுலகினருக்கு இருக்கும் நெருக்கம் குறித்த மேலும் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது.பாலிவுட் உள்பட இந்தியத் திரை உலகத்தினருக்கும், போதைப் பொருள் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாகப் புகார் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூருவில் மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு கன்னட டிவி நடிகை உள்படப் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த பலருக்குப் போதைப் பொருள் கும்பல்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாகப் பிரபல கன்னட நடிகைகளான ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்குப் போதைப் பொருள் கும்பல்கள் தான் காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரபல நடிகை தீபிகா படுகோன் உட்படப் பல முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று மும்பையில் மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல மும்பை டிவி சீரியல் நடிகையான பிரீதிகா சவுகானைப் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கஞ்சா உட்படப் போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். ஒருவரிடமிருந்து போதைப் பொருளை வாங்க முயன்ற போது தான் இவர் பிடிபட்டார். இவர் பிரபல இந்தி டிவி சீரியல்களான 'தேவோ கே தேவ் மகாதேவ்', சாவ்தான் இந்தியா' உட்பட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். ஒருசில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து நடிகைகள் கைது செய்யப்படுவது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை