தேசிய விருது தயாரிப்பாளர்- நடிகருக்கு கொரோனா உறுதி...

by Chandru, Oct 27, 2020, 10:10 AM IST

திரையுலகினரை ரவுண்டு காட்டி தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். ஏற்கனவே நடிகர் அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், எஸ் எஸ்.ராஜமவுலி. ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன் ,நிக்கி கல்ராணி, தமன்னா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். தற்போது தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் ஜே. எஸ். கே. சதீஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

தங்கமீன்கள்

ராம் இயக்கி நடித்த தங்க மீன்கள், ஆண்ட்ரியா, வசந்த் ரவி நடித்த தரமணி, பிரம்மா இயக்கிய குற்றம் கடிதல் மற்றும் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற வணிக ரீதியான பொழுது போக்கு படங்களையும் தயாரித்துள்ளார். இதில் தங்க மீன்கள் படம் சிறந்த படம், சிறந்த பாடல் ஆனந்த யாழை மீட்டுகிறாய் (நா.முத்துகுமார்), சிறந்த குழந்தை நட்சத்திரம் (சதானா) என 3 தேசிய விருதுகளை வென்றது.

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார். தரமணி, பேரன்பு போன்ற படங்களில் நடித்துள்ளதுடன் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனியின் அக்னிச் சிறகுகள், சிபி சத்தியராஜின் கபடதாரி, ஹர்பஜன் சிங் நடிக்கும் நட்பு, மற்றும் பிந்து மாதவி முக்கிய வேடத்தில் நடிக்க ரஞ்சித் ஜெயகோடி இயக்கும் யாருக்கும் அஞ்சேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா எச்சரிக்கை..

இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய ஆரம்பக் கட்டத்திலேயே ஜேஎஸ்கே எல்லோரையும் எச்சரித்து தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக முதல்வர் நிதிக்கு ரூ. 2 லட்சம் அளித்து, திரையுலகினர் முதல்வர் நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதியுதவி வழங்குமாறு தெரிவித்திருந்தார்.தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பற்றி ஜே எஸ் கே சதீஷ்குமார் இணைய தள பக்கத்தில் கூறும் போது,கோவிட் டெஸ்ட் செய்ததில் தொற்று அறிகுறியாக காய்ச்சல், உடல் வலி இருந்தது. அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். சில தினங்களில் என்னைச் சந்தித்தவர்களும் டெஸ்ட் எடுத்து பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை