நயனுக்கு போட்டியாக அம்மன் அவதாரம் எடுத்த நடிகை..

by Chandru, Oct 27, 2020, 14:36 PM IST

காதல் படம், காமெடி படம், பேய் படம் எனத் திரையுலகில் அவ்வப்போது ட்ரெண்டு மாறிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதமாக நடந்துவரும் நிலையில் தியேட்டர் மூடப்பட்டிருப்பதால் என்ன ட்ரெண்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது புரியாமல் தோராயமாக ஒரு டிரெண்டை மனதில் வைத்து படங்கள் உருவாக்கப்படுகிறது.

கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு வந்த நயன்தாரா திடீரென்று சில காலம் ஹீரோக்களுடன் ஜோடி போடாமல் சோலோ கதாபாத்திரங்களில் நடித்தார். ஒன்றிரண்டு படங்கள் ஜெயித்தாலும் அடுத்தடுத்த படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. மீண்டும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். திடீரென்று ஆ.ஜே. பாலாஜி சொன்ன மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்தார் நயன்தாரா.

கன்னியாகுமரி சென்று விரதம் இருந்து அப்படத்தில் நடித்தார் நயன்தாரா. படத்தின் ட்ரெய்லர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மன் படம் என்றாலும் அம்மன் வேடத்திலேயே அரசியல் பேசுகிறார். மதத்தின் பெயரால் மக்களை ஆட்டிப் படைக்கும் சாமியார்களைத் தோலுரிக்கிறார். தீபாவளி தினத்தில் இப்படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் புதிய ட்ரெண்டு தற்போது மற்றொரு பிரபல நடிகையை அம்மன் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறது. பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைத் தளத்தில் குரல் கொடுக்கும் கஸ்தூரிக்குத்தான் அம்மன் வேடம் ஆசை வந்திருக்கிறது.

அடிக்கடி தனது வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியாக படங்கள் வெளியிட்டு வாலிபர்களை மயக்கும் கஸ்தூரி கடந்த 2 மாதத்துக்கு முன் நடிகை வனிதா 3வது திருமண பிரச்சனையில் குறுக்கே புகுந்து, வனிதா மணந்த பீட்டர் பாலின் முதல் மனைவிக்காக நியாயம் கேட்டார். அது பெரும் மோதலாக கஸ்தூரி வனிதாவுக்கு இடையே மாறியது.தற்போது அம்மன் வேடம் அணிந்து கையில் திரிசூலத்துடன் இருக்கும் பக்தி பரவசத்துடன் கூடிய படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தான் நடிக்கும் புதிய படத்திற்காக கஸ்தூரியும் அம்மன் வேடத்துக்கு மாறி ஷாக் தந்திருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை